பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

கபோதிபுரக்


மருந்து எடுத்து வந்திருக்கிறார்” என்று வேதவல்லி கூறிக்கொண்டே, சாரதாவை எழுப்பினாள்.

சாரதா, தாயின் குரலைக்கேட்டு திரும்பினாள். கண்களைத் திறந்தாள். பரந்தாமன் மருந்துடன் எதிரில் நிற்பதைக் கண்டாள். அந்த ஒரு விநாடிப் பார்வை சாரதாவின் உள்ளத்தில் புரண்டுகொண்டிருந்த கருத்துக்கள் அத்தனையையும் காட்டிவிட்டது. கைநடுக்கத்துடன் மருந்துக் கோப்பையைப் பிடித்துக்கொண்டு பரந்தாமன் நின்றான். “வேதம்! வேதம்” என்று வெளியே வேதவல்லியின் புருஷர் கூப்பிடும் சத்தம் கேட்டது. வேதவல்லி, “இதே வந்தேன்” என்று கூறிக்கொண்டே வெளியே போனாள். காதல் நோயால் கட்டில்மீது படுத்துள்ள மங்கையும் அவளைக் காதலித்துக் கிடைக்கப் பெறாது வாடிய பரந்தாமன், கையில் மருந்துடனும் இருவருமே அங்கு இருந்தனர்.

அந்த அறை ஒரு தனி உலகம்!

அங்கு இன்பத்திற்குத் தடை இல்லை! கட்டு இல்லை! காவல் இல்லை! பெண்டுகொண்டேன் என அதிகாரம் செலுத்த மாரியப்பபிள்ளை இல்லை. மகளே, என்னை வேலை செய்கிறாய் என்று மிரட்ட வேதவல்லி இல்லை. கனைத்து மிரட்ட ராதாவின் தகப்பன் இல்லை.

காவலற்ற, கட்டற்ற உலகம்! காதலர் இருவர் மட்டுமே இருந்த உலகம்.

“மருந்தைக் குடி, சாரதா!”என்றான் பரந்தாமன். சாரதா வாயைக் கொஞ்சமாகத் திறந்தாள். மருந்து நெடியினால் முகத்தைச் சுளித்தாள். கட்டில் ஓரத்தில் உட்கார்ந்தான் பரந்தாமன். சாரதா, திறவாயை. இதோ மருந்து, குடித்துவிடு” என்று மருந்தை ஊற்றிவிட்டு, வாயைத் துடைத்தான். அந்தத் “தீண்டுதல் ராதா அதுவரை கண்டறியாத இன்பத்தை அவளுக்குத்