பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

கபோதிபுரக்


வுடன் வந்தவர்களுக்கு விஷயம் ஒருவாறு விளங்கிற்று.

“நடடா! நட! உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் பாதகா! நட. இங்கு நிற்காதே” என்று மாரியப்பபிள்ளை கூறிக்கொண்டே பரந்தாமனின் தலைமயிரைப் பிடித்து இழுத்து அறையைவிட்டு வெளியேகொண்டு வந்தார்.

“எஜமானருக்குத்தான் சொல்கிறேன். இவ்வளவு உரக்கக் கூவாதீர்கள். அண்டை அயலார் காதில் கேட்கப் போகிறது” என்று கருப்பையா கூறினான்.

“கேட்பதென்ன, செய்வதென்ன, என் போறாத வேளை. ஒரு வெட்கங்கெட்ட சிறுக்கியைத் தேடிப்பிடித்துக் கட்டிக்கொண்டேன். என் சோறு தின்றுவிட்டு சோரம் செய்கிறாள் இந்தக் கள்ளி. இன்று இருவரும் கொலை! ஆமாம்! விடமாட்டேன்! எடுத்துவா, அரிவாளை இரண்டு துண்டாக இந்தப் பயலையும் துண்டுத் துண்டாக அந்தக் கள்ளியையும் வெட்டிப் போடுகிறேன். விடு, கருப்பையா கையைவிடு. டே கிழ ராஸ்கல்! நல்ல பெண்டுடா! என் தலைக்குத் தீம்பாகக்கொண்டு வந்தாய். நிற்காதே என் எதிரே யாரும் நிற்க வேண்டாம் யார் நின்றாலும் உதை, குத்து, வெட்டு, கொலை ஆமாம்! விடமாட்டேன்” என்று மாரியப்பபிள்ளை இடி முழக்கம் போலக் கத்தினார். அவர் ஆயுளில், அதைப்போல, அவர் கத்தியதில்லை.

காரியஸ்தன் கருப்பையா விடவில்லை அவர் கரங்களை. “எஜமான்! எஜமான் சற்று என் பேச்சைக் கேளுங்கள். ஊர், நாடு தெரிந்தால் நமக்குத்தானே இழிவு. டே, பரந்தாமா போய்விடுடா வெளியே. வேதம்மா நீங்களும் போங்கோ— என்று மிகச் சாமர்த்தியமாகக் கூறிக்கொண்டே துடித்துக்கொண்டு கொலைக்கும்