பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

65


இருட்டும்வரை ஊர்ப்புறத்தே ஒளிந்திருந்து பிறகு மெல்ல நடந்து சாரதாவின் தாய் வீட்டை அடைந்தான் பரந்தாமன்.

நரைத்து நடை தளர்ந்துபோன அம்மாது விதவைக் கோலத்துடன் இருந்தாள்.

“கருத்து, மிரட்டும் கடுமழையில் எங்கிருந்து தம்பி நீ வந்தாய்” என்றாள். “வந்தேன் ஒரு முக்கியமான வேலையாக. நான் சாரதாவைப் பார்க்கவேண்டும்” என்றான் பரந்தாமன்.

“சாரதாவையா? நீ பழைய சாரதாவென எண்ணாதேயப்பா. அவள் என் மகள்தான். ஆனாலும் பெரிய பாவியானாள். அவள் முகத்தில் நான் விழிப்பதே இல்லை. ஊர் சிரித்துவிட்டது” என்று சலிப்புடன் தாய் கூறினாள்.

“சாரதா என்ன செய்தாள்?” என்றான் பரந்தாமன்.

“என்ன செய்தாளா? நல்ல கேள்விதான்!” என்று வெறுத்துக் கூறினாள் தாய்.

“இதோ, இதைப்பார். இதைத்தானே நீ கூறுகிறாய்” என்று கூறிக்கொண்டே, போட்டோவைக் காட்டினான் தாயிடம்.

“ஆ! படமும் எடுத்தார்களா!” என்று திகைத்தாள் தாய்.

“பயப்படாதே அம்மா, இதனைக் காட்டத்தான், நான் சாரதாவைப் பார்க்கவேண்டும்” என்றான் பரந்தாமன். “அநியாயம்! நீயாவது இந்தப் படத்தையாவது அவளிடம் காட்டுவதாவது வெட்கக்கேடு” என்றாள் தாய்.

“அம்மா! நீ விஷயமேதும் அறியாய். இந்தப் படத்தை ஒரு போக்கிரி வைத்துக்கொண்டு, சாரதாவை மிரட்டிக்கொண்டிருந்தான். பாவம் நம் சாரதா, எவ்வளவு பயந்தாளோ, பதைத்தாளோ, அழுதாளோ நமக்-

5