பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



106 கமலாம்பாள் சரித்திரம் இடையசைய அன்னம் போலடி பெயர்த்து மதரதி போற் கைவீசித் தன் கணவரிடம் வந்து, அவரை இனியவார்த்தைகள் கூறி மெதுவாய்த் தட்டி யெழுப்ப, சாதாரணமாகவே அவளுடைய அழகில் மயங்கிக்கிடக்கும் அவளுடைய புருஷர் கண் விழித்துப் பார்த்து வாசனையோடு கூடிய பொன் புஷ்பம்போல் விளங்குகின்ற அவளைக்கண்டு நம்முடைய பாக்கியமே பாக்கியம் என்று ஆனந்த பரவசமானார். அவர் விழித் தெழுந்ததைக் கண்ட. பொன்னம்மாளோ அவர்மேல் மெதுவாய்ச் சாய்ந்து கொண்டு கல் யாணமானது முதல் அன்றுவரை அவர் அறியாத அவ் வளவு அன்புடன் அவருடன் கேளீவிலாசம் செய்து கொஞ்சிக்குலாவி உரையாடினாள். இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று நினைத்துக் கொண்டவள் போல ' ஓஹோ! பாலையெடுத்துக் கொண்டுவர மறந்துவிட்டேன்' என்று அவள் சொல்ல, சுப்பிரமணிய அய்யர் ' இருக்கட்டும்போ , இதற்காக நீ மறுபடியும் போகவேண்டாம், இன் றைக்கு ஒரு நாளைக்குப் பாலில்லாவிட்டால் என்ன" இப்பொழுது' என, அதற்கவள் ' சே, நன்றாயிருக் கிறது, இது ஒரு சிரமமா எனக்கு? கல்யாணத்தில் தங்களுக்கு நிரம்ப சிரமம். (அவர் உடம்பைத் தொட்டுப்பார்த்துக்கொண்டு) ஏதுக்கே நிரம்ப உஷ்ண மாயிருக்கிறது. அப்பொழுதே அப்படி அலைகிறீர் களே, உடம்பு கெட்டுப் போமே என்று எனக்கு இருந்த விசாரம் எனக்குத்தெரியும். இப்படி உங்க ளுக்காகக் கவலைப்பட்டுக் கொண்டு வேளா வேளைக் குச் சோறில்லாமல் தண்ணில்லாமல் இராப்பகலாய்த் தூக்கமில்லாமல் நான் இங்கே கிடந்து தனியாய்த் தவித்துத் தத்தளிக்கிறது. நீங்கள் எனக்குத்தான் இந்தப் பூலோகத்தில் அதிசயமாய் அண்ணாவாம் - இருக்கிறது என்று அங்கேதானே சாப்பாடு அங்கே தானே படுக்கை யெல்லாம் பண்ணிக்கொண்டு நமக்