பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அதிரகசியமான சில சங்கதிகள். இவ்விதம் மூன்று வருஷகாலம் சென்றது. சூரிய சந்திர நட்சத்திரங்கள் எல்லாம் தங்கள் தங்களுடைய நித்திய கர்மானுஷ்டானங்களை வழுவாமல் நடத்திவந் தன. கமலாம்பாளும் முத்துஸ்வாமியய்யரும் விசனப் படுகிறார்களென்று அவைகளுக்கு யாதொரு கவலையும் இருப்பதாகக் காணவில்லை. நம்மை வென்ற கமலாம் பாள் மனங்கலங்கி உடல் வாடுகிறாளே யென்று மான், மயில், குயிலினங்கள் விசனப்படவுமில்லை. முத்து ஸ்வாமியய்யர் புத்திரசோகத்தால் வருந்துகிறாரே யென்று சற்றும் கவலையில்லாமல் தூர்த்தத் தன்மையையுடைய காற்று மரங்களுடன் தாராள மாய் ஸல்லாபம் செய்வதும், அவைகளுடைய புஷ்ப வர்க்கங்களை யனுபவித்தும், அவைகளுடன் மிருது வாய் முத்தமிட்டுக் கொஞ்சிக் குலாவி அவற்றின் நலங்களைக் கொள்ளை கொள்ளுவதும், ஒரு சமயம் ஊடிய கணவரைப்போல ஒரு வார்த்தையும் பேசாது ஒதுங்கி மௌனமாய் நிற்பதும், மற்றொரு சமயம் அவைகளுடன் சேர்த்து 'ஹோ' வென்று வெறிக் கூப்பாடிட்டு ஊர்ப்புறங்களை யெல்லாம் சீரழித்துச் சிந்தைகுலையச் செய்வதுமாகிய ஊடலாடலின்பங் களைக் கூசாமல் எப்பொழுதும் போல அனுபவித்துக் கொண்டிருந்தது. முத்துஸ்வாமியய்யருடைய இஷ்ட மித்திர பந்துக்கள் மாத்திரம் அவருடைய துக் கத்தைத் தங்களுடைய துக்கம் என்று பாராட்டி அவகாசமான வேளையில் வேறு யாதொரு காரியமும் செய்வதற்கு இல்லாவிட்டால் அவருடைய குழந்தை காணாமற்போன கதையைச் சொல்லிக் கொண்டிருந் தார்கள். மற்றப்படி உருண்டு கொண்டேயிருக்கிற