பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



14 கமலாம்பாள் சரித்திரம் வரையில் கழுதையுங் காலைப்பிடி,'" தான். இப்பொ ழுது எட்டாவது பிள்ளை பெற்றவளுக்கு ஆசார உப சாரமாய்க் கிடக்கிறது. இதற்கு முன்னே நடந்ததெல் லாம் நேற்றுக் குழந்தைக்குக்கூடத் தெரியும். தலைச் சன் பிள்ளைப் பெற்றிருந்தேன், வேளாவேளைக்கு மருந்து கிடையாது, சாப்பாடு கிடையாது. தாயாரும் பெண்ணுமாக கூடிக்கூடிக் குடியைக் கெடுக்கிற பேச் சுப் பேசிக்கொண்டிருந்தது தெரியாதா? அப்பொழுது ஒரு நாள் விளாச்சேரியிலிருந்து பலாப்பழமும் வந் தது. அன்றைக்கு மாதப்பிறப்பு; சேப்பங்கிழங்கு போட்டு மோர்க்குழம்பு, தேங்காய் கோசுமல்லி, பலாக் காய்க்கறி, கத்திரிக்காய் போட்டு பொரித்த கூட்டு, சக் கரவள்ளிக்கிழங்குக் கறி; புருஷர்கூட ஊரிலில்லை. மானாமதுரைக்குப் போயிருந்தார் மருமகனகத்துக்கு. அப்பொழுது எல்லாவற்றையும் பண்ணி எடுத்துக் கொண்டு, பலாப் பழத்திலேகூட எனக்கு ஒரு சுளை -- கிடையாது. பசுவன்' போல கொட்டிக்கொண்டு என் காதிலே படவேண்டுமாம், 'அடவாகக் கறிகாய் கூடக் கிடையாது' என்று சொல்லிக்கொண்டு, பருப் புத் துவையலும் சாதமுமாக, நல்ல நாள் திங்கள் நாள் கூடப் பாராமல் போட்டாளே. அதெல்லாம் மறந்து போவேன் என்று நினைக்கிறாயோ? அதுவும் ஒரு பக் கத்தில் இருக்கும்!' என்று சொல்லிக்கொண்டு நிமிர, அப்பொழுது பொன்னம்மாள் என்ற ஒரு ஸ்திரீ குட மும் கையுமாக எதிர்ப்பட்டாள்.) அவள் முத்துஸ்வாமி அய்யருடைய தம்பி சுப்பிர மணியய்யருடைய மனைவி ; தஞ்சாவூர்ப் பெண். இந் தப் பூமண்டலத்திற்குள் அவளுக்கு ஒருவரும் நிக ரில்லை. யாரையும் லட்சியமில்லாமல் எடுத்தெறிந்து பேசுவாள். பாவம்! சுப்பிரமணிய அய்யரைப் பம்பர -மாய் ஆட்டிவைப்பாள். இந்தப் பதிவிரதா சிரோமணியிடம் அவர் யதார்த்