பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

பெரிய காரியம் அன்று. ஆனால் அது எனது பெரும் பாக்கியம்.”

𝑥𝑥𝑥𝑥

புவனம் ஆக்கி—உலகங்கள் எல்லாவற்றையும் படைத்து; மற்று—பின்பு; (ஊழிக் காலத்தில்) அவை அனைத்தையும்–அவை எல்லாவற்றையும்; மணி வயிறு அடக்கி—(உனது) வயிற்றிலே அடக்கிக் கொண்டு; காக்கும் நீ—அவை அழியாமல் காக்கும் நீ—ஒரு வேள்வி காத்தனை—நான் செய்த இந்த வேள்வி காத்தாய்; எனும் கருத்து—என்று உலகோர் கருதும்படி செய்தது; எனது பாக்கியம்—எனது பெரும் பாக்கியமாக; உளது—அமைந்து விட்டது. என—என்று நினைவுறும் பான்மை போக்கி—நினைப்பதேயன்றி; நிற்கு—உன்றனக்கு; இது பொருள் என—இது ஒரு பெரிய காரியம் என்று; எண்ணுகிலேன்—நான் கருதுகின்றேன் அல்லன்.

𝑥𝑥𝑥𝑥

“இனி நான் என்ன செய்ய வேண்டும்?” இது இராமனின் கேள்வி.

“நீ செய்ய வேண்டிய காரியங்கள் பல உள. அவற்றைப் பிறகு பார்ப்போம். மிதிலையர் கோனாகிய ஜனகன் ஒரு வேள்வி செய்கிறார். அதைக் காண்போம்” என்று கூறினார் முனிவர். மூவரும் மிதிலைக்குப் புறப்பட்டனர். அங்ஙனம் புறப்பட்டு நடந்த மூவரும் ஓர் ஆற்றின் கரை அடைந்தனர். அதன் பெயர் சோணை ஆறு என்பது. அவ்வளவில் பொழுதும் போயிற்று. மூவரும் ஆங்கு ஓர் பொழிலிடையே தங்கி இரவு போக்கினர்.

மறுநாள். இரவு நீங்கியது. பொழுது புலர்ந்தது. கதிரவன் தோன்றினான்.

மூவரும் தம் யாத்திரை தொடங்கினர். கங்கைக் கரை அடைந்தனர்.