பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115

விதேக நாட்டிலே எங்கும் சோலைகள். மணம் தரு மலர்ச் செடிகள்! கொடிகள்! பூத்துக் குலுங்கும் அசோக மரங்கள். சல சல என்று ஓடும் நீரோடைகள், மலர்களிலே உள்ள தேனைக் குடித்துவிட்டு இந்த இனிய சூழ் நிலையிலே மயில்கள் தோகை விரித்து ஆடுகின்றன.

இந்த அருமையான இயற்கைக் காட்சியை வர்ணிக்கிறார் கம்பர்.

சோலைகள் எல்லாம் நடன அரங்குகள் போல் இருக்கின்றனவாம். அரங்கு என்று சொன்னால் ஆடுவதற்கு ஒரு பெண் வேண்டாமா ? அந்தப் பெண் யார்? மயில்கள் அழகிய தோகை விரித்து ஆடுவது பெண்கள் நாட்டியமாடுவது போலிருக்கிறதாம். வண்டுகள் ரீங்காரம் செய்வது யாழ் வாசிப்பது போலிருக்கிறதாம்.

தாளம் வேண்டுமல்லவா மதகுகளின் வழிவே சலசல என்று ஓடை நீர் பாய்வது எப்படியிருக்கிறதாம் ? ஆடலுக்கும் பாடலுக்கும் ஒப்ப மத்தளம் வாசிப்பது போலிருக்கிறதாம்.

நாட்டியம் என்றால் விளக்கு வேண்டாமா ? அசோக மரங்களிலே உள்ள மலர்கள் விளக்கு ஏந்தி நிற்பன போல் இருக்கின்றனவாம்.

𝑥𝑥𝑥𝑥

சோலை – விதேக நாட்டின் சோலைகளில்; வரம்பு இல்—கணக்கற்ற; வான் சிறை மதகுகள்—பெரிய நீர் நிலைகளின் மதகுகள்; முழவு ஒலி வழங்க—மத்தளம் முழங்க; அரும்பு நாள் மலர் – அவ்வப்போது மலரும் பூக்களை உடைய; அசோகுகள் – அசோக மரங்கள்; அலர் விளக்கு எடுப்ப—மலராகிய விளக்குகளை ஏற்றவும்; நரம்பின் நான்ற—யாழின் நரம்பு போல நீண்டு ஒழுகும்; தேன் தாரை கொள் – தேன்