பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119


இயற்கையிலே தூய்மையான ஆன்மாவானது மாயை ஆகிய அஞ்ஞான வசப்பட்டுக் கர்ம சரீரத்தில் நின்று உழலும் போது, அதனின்றும் விடுபட முயன்று, அஞ்ஞானம் நீங்கி, மெய்ஞானம் பெற்று இறைவன் திருவடிகளிலே கலக்கும் போது பெறும். அது போல, தூய்மை மிக்க அகலிகை இடையே நேர்ந்த குற்றத்தால் சாபம் பெற்றாள்; கல் உருக்கொண்டாள்.

இராமனுடைய திருவடி தூசிபடவே சாபம் நீங்கப் பெற்றாள்; பண்டை உருவம் எய்தினாள்; எழுந்து நின்றாள். மீண்டும் தன் கணவனை அடையும் பேறு பெற்றாள்.

𝑥𝑥𝑥𝑥

கண்ட கல் மிசை – அவர்கள் கண்ட கல் உருவத்தின் மீது; காகுத்தன் கழல் துகள் கதுவ—இராமனுடைய திருவடித் தூசி படிந்த உடனே; மெய் உணர்பவன் – உண்மைப் பொருளை அறிய முயலும் ஆன்மா (அம்மெய்யுணர்வினால்) உண்ட பேதைமை மயக்கு அற—முன்பு தான் கொண்டிருந்த அஞ்ஞான மயக்கம் தீரப் பெற்று; வேறுபட்டு—மாயையினின்றும் விடுபட்டு; உருவம் கொண்டு – தன் உண்மை உருக்கொண்டு; கழல் கூடியது ஒப்ப—இறைவன் திருவடிகளிலே கலத்தல் போல – பண்டை வண்ணம் ஆய் நின்றனள்—தன் முன்னை உருப்பெற்று (எழுந்து) நின்றாள்; மாமுனி (அப்போது) பெருமை மிக்க விசுவாமித்திர முனிவர்; பணிப்பான்—சொல்லத் தொடங்கினான்.

𝑥𝑥𝑥𝑥

ஆகாயத்திலிருந்த புனிதமான கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்த பகீரதனின் வழித் தோன்றலே! இராம !

இந்த மான்விழியாள் கெளதம முனியின் பத்தினி. இவள் மீது இந்திரன் விருப்பம் கொண்டான்; அறிவு மயங்கினான்;