பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

121


இவ்வண்ணம்—இந்த விதமாக; நிகழ்ந்த வண்ணம்—முன்பு நிகழ்ந்தது; இனி – இனிமேல்; இந்த உலகுக்கு எல்லாம் – இந்த உலகத்தில் உள்ள உயிர்களுக்கு எல்லாம். உய்வண்ணம் அன்றி—துன்பம் நீங்கி நலம் பெறுவதன்றி; மற்று ஓர் — வேறு ஒரு; துயர் வண்ணம்—துயர வாழ்க்கை; உண்டோ—உளதோ (இல்லை) மழை வண்ணத்து அண்ணலே—நீலமேக நிறத்தவனே . அங்கு—சித்தாசிரமத்திலே; மை வண்ணத்து–இருள் நிறத்தவனாகிய ; அரக்கி தாடகை ; போரில்—விழச் செய்த போரில் ; நின் கை வண்ணம் கண்டேன்—உனது கைத்திறம் கண்டேன்; இங்கு—இங்கே ; கால் வண்ணம் — உனது திருவடி மகிமை ; கண்டேன்

𝑥𝑥𝑥𝑥

பிறகு மூவரும் அகலிகையை அழைத்துக் கொண்டு கெளதம முனிவரின் ஆசிரமம் சென்றனர். இவர் தம் வரவு கண்ட கெளதமர் இவர்களை வரவேற்று உபசரித்தார் ; விசுவாமித்திர முனிவர் அகலிகையை ஏற்றுக் கொள்ளுமாறு கெளதம முனிவருக்குக் கூறினார். கெளதமரும் அகலிகையை ஏற்றார். பிறகு விசுவாமித்திரர் இராம லட்சுமணர்களை அழைத்துக் கொண்டு மிதிலை நகருள் புகுந்தார்.

𝑥𝑥𝑥𝑥


மையறு மலரின் நீங்கி யான்
       செய் மாதவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று
      செழுமணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அத்தக் கடிநகர்
      கமலச் செங்கண்
ஐயனை ‘ஒல்லை வா’ என்று
      அழைப்பது போன்றது அன்றே.

16