பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136



மானினன்‌ வருவ போன்றும்‌
      மயில்‌ இனம்‌ திரிவ போன்றும்‌
மீனினம்‌ மிளிர்வ போன்றும்‌
      மின்‌ இனம்‌ மிடைவ போன்றும்‌
தேன்‌ இனம்‌ சிலம்பி ஆர்ப்பச்‌
      சிலம்பினம்‌ புலம்ப எங்கும்‌
பூனனை கூந்தல்‌ மாதர்‌ ‘பொம்‌’
      எனப் புகுந்து மொய்த்தார்‌.

தேர்‌ மீது அமர்த்து அந்த மிதிலை மாநகரின்‌ வீதி வழியே உலா வருகிறான்‌ இராமன்‌. அவனைக்‌ காணும்‌ பொருட்டு அந்த நகரத்துப்‌ பெண்மணிகள்‌ ஒருவரை மற்றொருவர்‌ முட்டித்‌ தள்ளிக்கொண்டு முன்வரிசையில்‌ நெருங்கினார்கள்‌ எப்படி ? தலையிலே மலர்‌ கூடியதால்‌ நனைத்த கூந்தலுடன்‌. காலிலே அணிந்த சிலம்பு கலீர்‌ கலீர்‌ என்று ஒலிக்க மலரிலே மொய்த்த வண்டுகள்‌ ரீங்காரம்‌ செய்ய, மான்கள்‌ கூட்டமாக வருவன போன்றும்‌, மயில்கள்‌ கூட்டமாகத்‌ திரிவன போன்றும்‌, மீன்கள்‌ கூட்டமாக நீரிலே நீந்துவன போன்றும்‌, மின்னல்‌ கொடிகள்‌ பளிச்சிடுவன போன்றும்‌ ஒருவரை ஒருவர்‌ நெருக்கித்‌ தள்ளிக்‌ கொண்டு வந்தார்கள்‌; கூட்டம்‌ கூட்டமாக வந்தார்கள்‌.

𝑥𝑥𝑥𝑥

பூ நனை—பூச்‌ சூடியதால்‌ நனைந்த ; கூந்தல்‌–கூந்தலை உடைய; மாதர்‌—பெண்‌ மணிகள்‌; மானினம்‌ வருவபோன்றும்‌—மான்‌ கூட்டங்கள்‌ வருவன போலும்‌; மயில்‌ இனம்‌ திரிவ போன்றும்‌–மயில்‌ கூட்டங்கள்‌ திரிவன போலும்‌; மீன்‌ இனம்‌ மிளிர்வ போன்றும்‌—மீன்கள்‌ கூட்டம்‌ கூட்டமாக ஒளி வீசி நீரில்‌ நீந்துவன போலவும்‌; மின்‌ இனம்‌ மிடைவ போன்றும்‌—மின்னல்‌ கொடிகள்‌ பளிச்சிடுவன போலவும்‌; தேன்‌ இனம்‌ கிலம்பி ஆர்ப்ப—தேன்‌ வண்டுகள்‌ ரீங்காரம்‌ செய்து