பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

149

முனிவாரும்—முன்பு அணிந்திருந்து ஆபரணங்களை வெறுத்துக் களைவாரும்; பத்தியின்—வரிசையாக அவிர் செம் பென்—ஒளி வீசும் செம்பொன்னாகிய பல கலன்—அணிகலன்கள் பலவற்றை மகிழ்வாரும் — அணிந்து மகிழ்வாரும்; சுரிகுழல் — சுருண்ட கூந்தலில், தொத்து உறுதொழில்—பூங்கொத்துக்களால் சிறந்த வேலைப்பாடுகள் செய்யப் பெற்று அமைந்த; மாலை அணிவாரும் — மாலைகளை அணிந்து கொள்பவரும்; சித்திரம் நிறை தோயும் சித்திர வேலை நிறைய அமைந்த; செந்துகில் — சிவந்த ஆடைகளை; புனைவாரும்—உடுப்பவரும்.

𝑥𝑥𝑥𝑥


விட நிகர் விழியாரும்
        அமுதெனு மொழியாரும்
கிடை புரை இதழாரும்
        கிளர் நகை ஒளியாரும்
தட முலை பெரியாரும்
        தனியிடை சிறியாரும்
பெடை அன நடையாரும்
        பிடியென வருவாரும்

நஞ்சு நிகர் விழி கொண்ட பெண்களும், அமுது போன்ற மொழி பகரும் பெண்களும், சிவந்த நெட்டி போன்ற இதழ் உடைய பெண்களும், புன் முறுவல் பூத்த பெண்களும், முலை பெருத்த பெண்களும், இடை சிறுத்த பெண்களும், அன்னம் பேடு போலும் நடை கொண்ட பெண்களும், பெண் யானை போன்று அசைந்து அசைந்து நடக்கும் பெண்களும் வந்தார்கள்.

𝑥𝑥𝑥𝑥

விடம் நிகர் விழியாரும்—நஞ்சு போலும் கண் கொண்டவர்களும்; அமுது எனும் மொழியாரும் — அமுதம் என்று