பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

163

தக்க; செயிர் சுற்றிய – சினம் மிக்க; படையான்—படையுடையவனும்; அடல்மறம் – வலிமையும் வீரமும் கொண்ட; மன்னவர் திலகன்— அரசர்களுக்குத் திலகம் போல விளங்கிய கார்த்தவீரியார்ச்சுனன்; உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என—உயிருடையதொரு மரம்போல் நிற்கும்படி; ஓர் ஆயிரம் உயர் தோள் வயிரம்பணை – ஆயிரம் எண்ணிக்கை கொண்ட உயர்ந்த தோள்களாகிய வயிரம் பாய்ந்த கிளைகள்; துணிய—வெட்டுண்டு போக, தொடு—வீசிய; வடிவாய் மழு உடையான் — கூரிய வாய் கொண்ட மழு உடையவனும்;

𝑥𝑥𝑥𝑥

நிருபர்க்கு ஒரு பழி பற்றிட
        நில மன்னவர் குலமும்
கருவற்றிட மழுவாள் கொடு
        களைகட்டு உயிர் கவரா
இருபத் தொரு படி கால்
        இமிழ் கடல் ஒத்து அலை எறியும்
குருதிப் புனல் அதனிற் புக
        முழுகித் தனி குடைவான்.

பரசுராமன் கார்த்தவீரியார்ச்சுனனைக் கொன்றனன். அதனாலே சினங்கொண்டார்கள் கார்த்தவீரியார்ச்சுனன் மக்கள். பரசுராமன் இல்லாத சமயம் பார்த்து அவனுடைய தந்தை ஜமதக்னி முனிவரைக் கொன்று பழிக்குப்பழி வாங்கினார்கள். பரசுராமன் கோபம் கொண்டான். இருபத்தொரு தலைமுறை கவித்திரிய அரசர்களைக் கொன்றான்; அவர் தம் குருதி வெள்ளத்திலே நீராடி வஞ்சம் தீர்த்துக் கொண்டான்.

𝑥𝑥𝑥𝑥