பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

(ஆதலின்) கொல்லிற் பிழையாம் - இவளைக் கொல்வது பிழை; என்னா - என்று; ஒடியான் - சோர்வுற்றவனாகி; நெஞ்சத்து - அவளுடைய மார்பிலே; ஓர் அடி கொண்டான் - ஓர் அடி கொடுத்தான்; இடி ஏறு உண்ட - பேரிடியால் தாக்கப்பட்ட மால் வரை போல் - பெரிய மலை போல; உயிரோடும் - உயிருடன்; மண்ணிடை வீழ்ந்தாள் - பூமியிலே விழுந்தாள்.

***

ஆத்துறு சாலை தோறும்
        ஆனையின் கூடந் தோறும்
மாத்துறு மாடம் தோறும்
        வாசியின் பந்தி தோறும்
காத் துறுஞ் சோலை தோறும்
        கருங்கடல் கடந்த காலால்
பூந்தொறும் வாவிச் செல்லும்
        பொறி வரி வண்டில் போனான்.

அப்படி விழுந்த இலங்காதேவி ரத்த வெள்ளத்தில் அழுந்தி வருந்தினாள். முன்பு பிரமதேவன் அவளுக்கிட்ட கட்டளையை நினைவு கூர்ந்தாள்; எழுந்தாள். இராம தூதனாகிய அநுமன் முன் நின்றாள்.

“ஐய! கேட்பாயாக! பிரமதேவனுடைய கட்டளையைச் சிரமேல் தாங்கி இவ் இலங்காபுரியைக் காவல் புரியும் இலங்காதேவி நான். ‘எத்தனை காலம் காவல் புரிய வேண்டும் நான் என்று பிரமனைக் கேட்டேன். வலிமை வாய்ந்த குரங்கு ஒன்று உன்னைத் தொட்டுத் தன் கைகளால் தாக்கும் வரை காவல் புரிவாய், பிறகு அந்நகர் அழிவுறும்’ என்றான் பிரமன்.

பிரமன் வாக்கு இன்று பலித்துவிட்டது. இனி இவ் இலங்கை மாநகர் அழிவது உறுதி. மறம் தோற்று அறம்