பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117



“இந்த அழகிய மாளிகை தனித்திருக்கக் காரணம் என்ன? சீதையை இங்கே சிறை வைத்திருக்கிறானோ?” என்று ஐயுற்றான். உள்ளே சென்றான்.

மயன் மகளும் இராவணனுடைய முதல் மனைவியுமாகிய மண்டோதரி உறங்குகிறாள். அவளுடைய கால்களைத் தேவ மாதர் வருடிக் கொண்டிருக்கின்றனர். மற்றும் சில தேவ மகளிர் யாழ் மீட்டி மெல்லிசை எழுப்புகின்றனர். கற்பக மலர் வீசும் நறுமணம் எங்கும் பரிமளிக்கின்றது. மணி விளக்குகளின் ஒளி மயங்கும் வண்ணம் பேரொளி வீசும் உடல் வனப்புடன் உறங்குகின்றாள் மண்டோதரி.

கண்டான் அநுமன் “இவள்தான் சீதை போலும்” என்று கருதினான். பொங்கியது சினம். பெருந்துயர் உற்றான்; வருந்தினான்.

“அன்பாகிய பிணைப்பையும், உயர்குடிப் பிறப்பையும் கைவிட்டுக் கற்பு நெறியினின்றும் வழுவினாளோ சீதை” என்று ஐயுற்றான்.

***


‘மானுயர்த் திரு வடிவினள் அவள்; இவள்
        மாறு கொண்டனள்; கூறில்
தான் இயக்கியோ? தானவர் தையலோ?
        ஐயுறும் தகை ஆனாள்!
கான் உயர்த்த தார் இராமன்மேல் நோக்கிய
        காதல் காரிகையர்க்கு
மீன் உயர்த்தவன் மருங்குதான் மீளுமோ?
        நினைந்தது மிகை’ என்றான்.

“இல்லை; இல்லை. அவள் மானிட வடிவங் கொண்டவள். இவளோ மாறாக இருக்கின்றாள், ஆகவே இவள்