பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125

வேன்; பொன்றாத பொழுது - நான் உயிர் விட்டாலன்றி; எனக்கு இக் கொடும் துயரம் போகாது - எனக்கு இக்கொடிய துயரம் போகாது.

***

கண்டு வரும் என்று இருக்கும்
        காகுத்தன்; கவிகுலக்கோன்
கொண்டு வரும் என்று இருக்கும்
        யான் இழைத்தகோள் இதுவால்
புண்டரிக நயனத்தன் பால்
        இனியான் போவேனோ?
விண்டவரோடு உடன் வீயாது
        யான் வாளா விளிவேனோ?

சீதையைக் கண்டு வருவேன் என்று ஆவலோடு இருப்பானே காகுத்தன்? நல்ல சேதி கொண்டு வருவேன் என்று காத்திருப்பானே சுக்கிரீவன்? செந்தாமரைக் கண்ணனாகிய அந்த இராமன்பால் நான் திரும்பிச் செல்வேனோ? வானர வீரர் உயிர் துறக்க முயன்றபோது நானும் அவருடன் உயிர் விடாமல் போனேனே. இனி வீணில் மாள்வேனோ? என்று கலங்குகிறான் அநுமன்.

***

காகுத்தன் - இராமன்; கண்டு வரும் என்று இருக்கும் - நான் சீதையைக் கண்டு வருவேன் என்று கருதி இருப்பான்; கவிகுலக்கோன் - குரங்கினத்தின் அரசனாகிய சுக்கிரீவன்; கொண்டு வரும் என்று இருக்கும் - சீதை பற்றிய நல்ல சேதி கொண்டு வருவேன் என்று இருப்பான்; யான் இழைத்த கோள் இதுவால் - நான் செய்த செயலோ இவ்வாறு இருக்கிறது; புண்டரீக நயனத்தன் பால் - செந்தாமரை மலர் போலும் கண் உடைய இராமன் பால்; இனி யான் போவேனோ - இனி நான் செல்வேனோ; விண்டவர் உடன்