பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

போனது போன்ற; உருவாள் - உருவத்தை உடையவளாக இருந்தாள்.

***

வீடினது அன்று அறன்;
        யானும் வீக லேன்;
தேடி னென்; கண்டனன்
        தேவியே எனா
ஆடினன்; பாடினன்;
        ஆண்டும் ஈண்டும் பாய்ந்து
ஓடினன்; உலாவினன்;
        உவகைத் தேன் உண்டான்.

சீதா தேவியைக் கண்ட அநுமன் ‘இவள் தேவியே’ என்று தெளிந்தான்; மகிழ்ந்தான். அம் மகிழ்ச்சியில் மதுவருந்தியவன் போல் ஆனான். ஆடினான்; பாடினான்;. அங்குமிங்கும் ஓடினான்; தாவினான். தருமம் அழியவில்லை நானும் சாகமாட்டேன் என்று கூவினான்.

***

அறம் வீடினது அன்று - தருமம் அழியவில்லை; யானும் வீகலேன் - நானும் இனி இறக்கமாட்டேன்; தேடினேன்; கண்டனன் - இது வரை தேடி வந்த நான் இப்பொழுது கண்டு கொண்டேன்; தேவியே எனா - “இவள் சீதா தேவியே ஆவள்” என்று; உவகைத் தேன் உண்டான் - மகிழ்ச்சி மது வருந்திய அநுமன்; ஆடினன் - அந்த மகிழ்ச்சியின் பொங்குதலால் கூத்தாடினன்; பாடினன் - பலவாறு புகழ்ந்து பாடினான்; ஆண்டும் ஈண்டும் - அங்கும் இங்கும்; பாய்ந்து ஓடினன் - தாவி ஓடினான்.

***