பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147

போது வந்தாய் அல்லை; தலை எடுத்து இன்னமும் மகளிர் தாழ்தியோ - அத்தகைய ஆண்மையற்ற நீ உன் பத்துத் தலைகளையும் தூக்கிக் கொண்டு மகளிரைப்போல் தலை குனிவாயோ?

***


குன்று நீ எடுத்த நாள் தன்
        சேவடிக் கொழுந்தால் உன்னை
வென்று வன்புரங்கள் வேவத்
        தனிச் சரம் துரந்த மேரு
என் துணைக் கணவன் ஆற்றற்கு
        உரனிலாது இற்று வீழ்ந்த
அன்று எழுந்து உயர்ந்த
        ஓசை கேட்டிலை போலும்

கயிலாய கிரியை நீ பெயர்த்தாயே! அப்போது சிவபெருமான் தமது கால்விரல் நுனியை அழுத்தி உன்னை வென்றாரன்றோ? அச் சிவபெருமான் திரிபுர தகனம் செய்தபோது எந்த வில்லைக்கொண்டு அம்பு தொடுத்தாரோ அதே வில்தான் எனது கணவராகிய இராமனின் வலிமைக்கு ஆற்றாது ஒடிந்தது. அப்போது எழுந்த ஒலியை நீ கேட்டிலையோ? கேட்டிருந்தால் என்னை அபகரித்து வந்திருக்கமாட்டாய்.

***


குன்று எடுத்த நாள் - கயிலை மலையை நீ எடுத்த அன்று; தன் சேவடிக் கொழுந்தால் - தன்னுடைய சிவந்த பாதத்தின் நுனி விரலால்; உன்னை வென்றவன் - உன்னை அம் மலையின் அடியில் வைத்து அழுத்தி வென்ற சிவபெருமான்; புரங்கள் வேவ - முப்புரங்கள் நெருப்பால் எரிந்து வெந்து அழிய; தனிசரம் துரந்த - ஒப்பற்ற பாணம்