பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

161

பொறையும் ஒத்தாள் - திரும்பவும் பார்வை பெற்றது போன்ற ஓர் உடலை ஒத்தாள்.

***


வாங்கினள்; முலைக்கு வையில்
        வைத்தனள்; சிரத்தால்
தாங்கினள்; மலர்க் கண் மிசை
        ஒத்தினள்; தடந்தோள்
வீங்கினள்; மெலிந்தனள்
        குளிர்ந்தனள்; வெதுப்போடு
ஏங்கினள்; உயிர்த்தனள்
        இனி இன்னது எனலாமே.

அநுமன் கொடுத்த அந்தக் கணையாழியைத் தன் கைகளால் வாங்கினாள் சீதை. மார்பிலே வைத்து அணைத்தாள்; உச்சி மேல் வைத்துக் கொண்டாள்; கண்களிலே ஒத்திக் கொண்டாள்; இராமபிரானை நேரிலே கண்டவள் போலே மகிழ்ந்தாள். அந்த மகிழ்ச்சியிலே அவளது தோள்கள் பூரித்தன; உள்ளம் குளிர்ந்தாள். மறுகணம் பெருமூச்சு விட்டு ஏங்கினாள். உடல் மெலிந்தாள். ஏன்? இராமனை நேரில் காண முடியவில்லை அல்லவா! அவள் அடைந்த மனோநிலை இன்னது என்று விவரித்தல் முடியாது.

***

வாங்கினள் - அந்த மோதிரத்தைத் தன் கைகளிலே வாங்கிக் கொண்டாள்; முலைக் குவையில் வைத்தனள் - தனது தனங்களின் முகட்டிலே வைத்து அணைத்துக் கொண்டாள்; சிரத்தால் தாங்கினள் - தலைமேல் வைத்துக் கொண்டாள்; மலர் கண் மிசை ஒத்தினள் - தாமரை மலர் போன்ற தனது கண்களிலே ஒத்திக்கொண்டாள்; தடம் தோள் வீங்கினள் - அந்த மகிழ்ச்சியால் இராமனை நேரில் கண்டவள் போலத் தனது பெரிய

கி.—11