பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

துன்புற்றான் இராவணன்; அன்று முதல் வாலியின் நண்பன் ஆனான்.

***

அஞ்சலை! அரக்க! பார் விட்டு
         அந்தரம் அடைந்தான் அன்றே
வெஞ்சின வாலி மீளானி;
         வாலும் போய் விளிந்தது அன்றே
அஞ்சன மேனியான் தன்
        அடுகணை ஒன்றால் மாள்கித்
துஞ்சினன்? எங்கள் வேந்தன்
        சூரியன் தோன்றல் என்றான்.

“அஞ்சாதே! அரக்கனே! இம் மண் விட்டு விண் சென்றான் வாலி. இனித் திரும்பவும் வாரான். உன் கொட்டம் அடக்கிய அவன் வாலும் போயிற்று.”

“மை வண்ணத்தனாகிய இராமனின் கணை ஒன்றினால் விண்புக்கான் வாலி. இப்பொழுது எங்கள் அரசன் சூரியன் புதல்வனாகிய சுக்கிரீவன் ஆவான்” என்றான்.

***

அரக்க - அரக்கனே! அஞ்சலை - அஞ்சாதே; வெம்சின வாலி - கொடிய கோபம் உடைய வாலியானவன்; அன்றே - சில மாதங்கள் முன்பே; பார் விட்டு - இந்நிலவுலகு விட்டு; அந்தரம் அடைந்தான் - வான் உலகு புகுந்தான்; மீளான் - இனித் திரும்பி வரமாட்டான்; அன்றே - அவன் இறந்த அப்பொழுதே; வாலும் போய் விளிந்தது - அவனுடைய வாலும் அவனோடு போயிற்று; அஞ்சன மேனியான் தன் - மை போலும் கரிய நிறமுடைய இராமனின்; அடுகணை ஒன்றால் - பகையழிக்கும் அம்பு ஒன்றால்; மாள்கி- வருந்தி; துஞ்சினன் - இறந்தான்; எங்கள்