பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

சாதாரண வர்ணனையா அது? இல்லை, இல்லை! தெய்வீக வர்ணனை—அத்துடனா? இராமபிரானுடைய நிலையையும், தன்னுடைய வரலாற்றையும் சொல்லி, இராமன் பிராட்டிக்கென கூறியனுப்பிய சில விசேட அடையாள உரைகளையும் கூறுகிறான். பின் அண்ணல் கொடுத்த கணையாழியையும் அன்னையிடம் கொடுக்கிறான்.

கணையாழியைக் கண்ட பிராட்டி உணர்ச்சிக் குவியல் ஆர்கிறார். ஆரண்ய கிட்கிந்தா காண்டங்களில் நடந்தவற்றை அறிந்த சனகனின் மகள் மென்மேலும் வேதனைப்படுகிறாள்.

5. சூடாமணிப் படலம்

பிராட்டி அநுமனுக்கு இராமபிரானிடம் சொல்ல சில செய்திகளைக் கூறினாள். அத்துடன் சூடாமணியையும் கொடுத்தாள். அன்னைக்குத் தன் பேருருவைக் காட்டினான் வாயுவின் மகன். சூடாமணிப் படலத்துடன் அநுமனை இலங்கைக்கு அனுப்பிய காரியம் வெற்றியுடன் முடிந்துவிட்டது. என்றாலும், ஆற்றலும் அறிவும் மிக்க இராம தூதன் அத்துடன் திரும்பவில்லை. தன் கோபத்தீயிக்கு தீனியும் போட்டான்.

6. பொழிலிறுத்த படலம்

7. கிங்கரர் வதைப்படலம்

8. சம்புமாலி வதைப்படலம்

9. பஞ்ச சேனாபதிகள் வதைப்படலம்

10. அக்ஷய குமாரன் வதைப்படலம்

சூடாமணி படலத்திற்குப் பின்வரும் இப்படலங்கள் யாவும் அரக்கர்களுடன் அநுமன் தனித்து நின்று போர் செய்த படலங்களாக அமைகின்றன. பொழிலிறுத்த படலம் முதல் அநுமன் இராவணனின் வளத்தை நிர்மூலமாக்கிப்