பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

225


“மேலும் மேலும் பெருகி வரும் வானரப் படையானது இலங்கை வந்து சேருமுன்னம் கடல் தாண்டிச் சென்று நம் எதிரிகளான நரரையும் வானரரையும் தாக்கி வேறு திசைகளில் செல்லவொட்டாமல் நொறுக்குவதே இனி நாம் செய்யத்தக்கது ஆகும்.”

இவ்வாறு கூறினான் கும்பகன்னன்.

***

ஊறுபடை - மேலும் மேலும் பெருகிவரும் வானரப் படையானது; ஊறுவதன் முன்னம் - இலங்கை வந்து நிரம்புவதன் முன்னால்; ஒரு நாளே - ஒரே நாளில்; ஏறு கடல் ஏறி - அலை புரளும் கடலைத் தாண்டிச் சென்று; நரர் வானரரை எல்லாம் - மனிதர், வானரர் ஆகியவர் எல்லாரையும்; வேறு பெயராத வகை - வேறு எங்கும் போய்விடாதபடி முடக்கி; வேரோடும் அடங்க - பூண்டோடு அழிந்து போகும்படி; நூறுவதுவே - அடித்து நொறுக்குவதே; கருமம் - நாம் செய்ய வேண்டிய காரியம்; என்பது நுவன்றான் - என்று சொன்னான்.

***

கும்பகன்னன் கூறியதற்கு இசைந்து, போருக்குச் செல்லத் தீர்மானிக்கிறான். அப்போது, மண்டோதரியின் மகன் இந்திரசித்து, தந்தையின் செயலைத் தடுத்துக் கூறுகிறான்.

“உங்கள் கட்டளைகளைச் சிரமேற்கொண்டு வெற்றியே பெற்றுவரும் வலிமையுள்ள பலரிருக்கையில், அரசன் தானே போருக்குச் செல்வது சிறப்போ? இந்த அற்ப மானிடரை எதிர்க்க எங்களைப் படையுடன் அனுப்புதல் சிறுமையாகுமோ? உங்கள் மகன் நான்; உங்களுக்காகப் பொருது உங்களுக்கு வெற்றித் தேடித் தருவேன்” என்று வீர சபதம் செய்கிறான். “வானரர்களை எல்லால் முற்றும் அழிப்பேன். மாற்றார் வலிமை அற்றவர்; அவர்களை வெல்ல, என்னை

கி.—15