பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

249

தசரத சக்கரவர்த்தி; புகல் அரும் கானம் தந்து - புகுவதற்கு அரியகாட்டை எனக்கு அளித்து; புதல்வரால் பொலிந்தான். புதல்வரால் மேன்மையுற்று விளங்கினான்.

விபீடணன் அடைக்கலத்தின் பின் அன்னையைப் பிரிந்த அண்ணல் பிரிவாற்றாமையால் வாடுகிறான். சுக்ரீவன் அவனைத் தேற்றி மேற்கொண்டு செய்யவேண்டியதை விபீடணனுடனும் கலந்து ஆலோசிப்பதே நல்லது!” எனக் கூறுகிறான். இராமபிரான் சிறிது நெளிந்து விபீடணனை வரவழைத்து விவரங்களைக் கேட்டறிகிறான்.

கடல் கடந்து சேனையுடன் எப்படி செல்வதென்று தீவிரமாகக் கலந்தாலோசிக்கிறான். விபீடணன் இராமனுக்கு இலங்கையின் வலிய அரணைப் பற்றியும், இராவணனது வலிமைப் பற்றியும் அவனைச் சார்ந்தோர் போராற்றல் பற்றியும் விரிவாகக் கூறுகிறான். அரக்கர் கோனின் சேனைப்பற்றிக் கூறினான்; அநுமன் இலங்காபுரியில் புரிந்த வீர சாகசங்களைப்பற்றி மிகவும் புகழ்ந்து உரைக்கிறான். இராமனும் மகிழ்ந்து அநுமனுக்கு வரமும் அளிக்கிறான்.

பிறகு இராமன் விபிடணனை, “கடலைக் கடக்கும் உபாயம் என்ன?” என்று கேட்கிறான்.

அதற்கு விபீடணன், ‘வருணன் கடலின் கடவுள்; எனவே அவனைச் சரணடைந்து அவன் அருளைப் பெற்றால், கடலைக் கடக்க முடியும்’ என்று கூறுகிறான். இராமன் வருணனை வேண்டி ஏழு நாட்கள் வருண மந்திரத்தை தர்பைமீது அமர்ந்து செபிக்கிறான். எனினும் வருணன் வரவேயில்லை. இராமன் சினந்து, தன் வில்லைக் கொண்டு பற்பல அம்புகளைத் தொடுத்தான். என்றாலும், வருணன் வராமையால், பிரமாத்திரத்தைப் பூட்ட, வருணன் பயந்து உடன் வந்தான். காணிக்கைகளை செலுத்தி அவன்