பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

261

“நிலம், நீர், தீ, காற்று, வெளி என்று சொல்லப்பட்ட ஐம்பெரும் பூதங்களின் தலைவன்; கடலால் சூழப்பட்ட இந்த பூமண்டலத்தின் தலைவன்; புவியின் புதல்வியான சீதையின் நாயகன்; வேறுள்ள தெய்வங்கள் எல்லாவற்றிற்கும் தலைவன்; நீ ஓதும் வேதத்தின் தலைவன்; எதற்கும் மேலான விதிக்கும் தலைவன்; இத்தகைய இராமன் அனுப்பிய தூதன் நான். எனக்குக் கட்டளையிட்டபடி சொல்லும் பொருட்டு வந்தேன்” என்றான்.

***

பூத நாயகன் - நிலம், நீர், தீ, காற்று, வெளி என்று சொல்லப்பட்ட ஐம்பெரும் பூதங்களுக்கும் தலைவன்; நீர் சூழ்ந்த - கடலால் சூழப்பட்ட; புவிக்கு - பூமிக்கு; நாயகன்-தலைவன்;இப்பூமேல்- இப்புவியின் புதல்வியாகப் பிறந்துள்ள; சீதை நாயகன் - சீதையின் கணவன்;வேறுள்ள தெய்வ நாயகன் - வேறுள்ள தெய்வங்கள் எல்லாவற்றுக்கும் தலைவன்; நீ செப்பும் - நீ ஓதுகின்ற; வேத நாயகன் - வேதத்தின் பொருளாய் விளங்கும் தலைவன்; மேல் நின்ற - எதற்கும் மேலாக நிற்கும்;விதிக்கு நாயகன் - ஊழ்வினைக்குத் தலைவன்; (ஆகிய இராமன்) தான் விட்ட - உன் பால் அனுப்பிய; தூதன் யான் பணித்த மாற்றம் - எனக்குக் கட்டளையிட்டபடி; சொல்லிய வந்தேன் என்றான் - சொல்ல வந்தேன் என்றான்.

***

(இதைக் கேட்ட இராவணன் இராமபிரானைப் பற்றி என்ன கூறினான்?)

***

அரன் கொலாம்? அரி கொலாம்? மற்று
        அயன் கொலாம்? என்பார் அன்றிக்
குரங்கெலாம் கூட்டி, வேலைக்
        குட்டத்தைச் சேதுக்கட்டி