பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


தம்பியாகிய சுக்கிரீவன் தன்னுடன் போர் செய்ய வந்திருப்பது அறிந்தான்: சிரித்தான். அந்தச் சிரிப்பு எல்லாத்திக்குகளிலும் எதிரொலி செய்தது. சுக்கிரீவன்மீது சினம் கொண்ட வாலி தன் படுக்கைவிட்டு எழுந்தான். வேகமாக எழுந்தான். அந்த வேகத்தினாலே கிட்கிந்தை பூமியிலே அழுந்தியது. அவனது கண்கள் தீப்பொறி கக்கின. வாலி தன் கைகள் இரண்டையும் ஒன்றுடன் மற்றொன்று தட்டினான்.

***


வந்தனென் வந்தனென்
        என்ற வாசகம்
இந்திரி முதல் திசை
        எட்டும் கேட்டன
சந்திரன் முதலிய
        தாரகைக் குழாம்
சிந்தின மணிமுடிச்
        சிகரம் தீண்டவே.

“இதோ வந்தேன்; இதோ வந்தேன்” என்று எதிர் முழக்கம் கொடுத்தான் வாலி.

அப்படி அவன் முழங்கியது இந்திரனுக்குரிய கிழக்குத் திசை முதலாகிய எட்டுத் திக்கும் கேட்டது.

சந்திரனை முதலாகக்கொண்ட நட்சத்திரக் கூட்டங்கள் சிதறின. எதனால்? வாலியின் மணிமுடிச் சிகரம் தீண்டியதால்.

***


வந்தனென் வந்தனென் என்ற வாசகம் - இதோ வந்து விட்டேன்; இதோ வந்துவிட்டேன் என்று வாலி கூறிய வீரச்சொற்கள்.