பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322


உணர்வொடு - நல்லறிவுடன்; ஊண் உடை - (தன்னை) ஊணாகவுடையவன் ; உயிர் தொறும் - ஞானிகளிடத்தில் எல்லாம்; உறை வுறும் ஒருவன் - (விருப்போடு) வசிப்பவரான திருமாலின் அம்சமான இராமபிரான்; தூண் உடை நிரை புரை - தூண்களினுடைய வரிசையை ஒத்தனவான; கரம் அவை தொறும் - (பத்துக்) கைகளிலும் கொண்டுள்ள: அ - அந்த, கோண் உடை - வளைதலை உடைய மலை நிகர் சிலை - மலை ஒத்த விற்கள்; இடை குறைய - நடுவிலே துண்டு படும்படி சேண் உடை - வெகு தூரம் செல்லுதலை உடையனவாய்; நிகர் கணை - ஒளி கொண்ட அம்புகளை: சிதறினன் - வாரியிறைத்தான்.

இராமனின் தேரின் கொடியாக வந்தமர்ந்தான் கருடன். இராமன் இராவணன்மீது தாமதாத்திரம் விட்டான். இவ்அத்திரம் ஒன்றுக்கு ஒன்று எதிரிடையான பல விளைவுகளை விளைவித்தன. சிவ வாளியை விட்ட இராமன் திருமேனி மீது பல பாணங்களைச் செலுத்தினான் அரக்கன். இராமன் அக்கினிப் படையால் அரக்கன் செலுத்திய ஆசுர படையை அழித்தான்.

***

கூற்றுக் கோடினும் கோடல,
        கடல் எலாம் குடிப்ப,
நீற்றுக் குப்பையின் மேருவை
        நூறுவ, நெடிய
காற்றுப் பின் செலச் செல்வன,
        உலகு எலாம் கடப்ப,
நூற்றுக் கோடி அம்பு எய்தனன்,
        இராவணன் நொடியில்.

கண்டான் இராவணன். கொண்டான் சினம், கொடானு கோடி உயிர்களைக் குடிக்கும் யமன் போன்ற நூற்றுக் கோடி