பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328

சிதறுகின்ற; உயிர்ப்பன - நெட்டுயிர்ப்புடன் கூடியவனும்; சீற்றத்தன் - சினம் உடையவனுமாகி; மா இரு ஞாலமும் விசும்பும் - விரிந்த இந்த உலகமும் ஆகாயமும்;வைப்பு அற - இடமின்றி ஒழிய, உருமின் தோற்றத்த இடியொத்த காட்சியை அடைய; சுடுசரம் - எரிக்கின்ற அம்புகளை; தூயினன் - வாரிஇறைத்தான்.

***

ஒக்க நின்று எதிர் அமர்
        உடற்றும் காலையில்,
முக்கணான் தடவரை எடுத்த
        மொய்ம்பற்கு
நெக்கன, விஞ்சைகள்,
        நிலையின் தீர்ந்தன;
மிக்கன, இராமற்கு வலியும்
        வீரமும்

இராவணனின் சரம், இராமசரத்தின் முன் வீழ்ந்தன. இராம சரம், அரக்கர்கோன் மார்பிற் பாய்ந்தது. அப்போது என்னவாயிற்று? கையிலாய மலையை எடுத்த வலிமை உடைய இராவணனுக்கு நினைவாற்றல் குறைந்தது. அவனும் தளர்ந்தான். அவன் தளர்ச்சி, இராமனுக்கு மிகுந்த வலிமையும் வீரத்தையும் கொடுத்தது.

***

ஒக்க நின்று - சரிசமமாக நின்று; எதிர் - எதிர்த்து; அமர் உடற்றும் காலையின் - போர் புரியுங்கால்; முக்கணான் தட வரை எடுத்த மொய்ம்பற்கு - மூன்று கண்களை உடையவனான சிவபெருமானுடைய பெரிய கயிலை மலையைத் தூக்கிய தோளையுடைய இராவணனுக்கு; விஞ்சைகள் - (கற்ற) மாய வித்தைகள், தெக்கன - நினைவினின்றும் நெகிழ்ந்தனவாய்; நிலையில் தீர்ந்தன - (தம்) நினைவில்