பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58


இவ்வளவு சங்கடங்களை கடந்து இலங்கைக்குச் செல்லக் கூடியவர் யார்? மகேந்திர மலையில் வானரர்கள் யோசிக்கின்றனர். எதைப் பற்றி? யாரை இலங்கைக்கு அனுப்புவது என்று சாம்பவன் வானரர்களுடன் சேர்ந்து ஆலோசனை செய்கிறான்,

***


ஏகு மின் ஏகி எம் உயிர் நல்கி
        இசை கொள்ளீர்
ஓகை கொணர்ந்து உம் அன்னையும்
        இன்னல் குறையில்லாச்
சாகர முற்றுந் தாவிடு
        நீரிக் கடரவும்
வேகம் அமைந்தீர் என்று
        விரிஞ்சன் மகன் விட்டான்.

சாம்பவான் அநுமனை நோக்கிச் சொன்னான். “இப்பெரிய பணியைச் செய்யக்கூடியவன் நீ ஒருவன்தான். உன்னால்தான் இப்பெரும் கடலை ஒரே நொடியில் கடக்க இயலும், எனவே தயங்காதே. விரைந்து சென்று உன் தாய் போன்ற சீதையைக் கண்டு வா. அவருக்கு ஆறுதல் கூறு. அவர் துன்பக் கடலைத் தாண்டி கரையேறச் செய். அத்துடனன்றி எங்களுக்கும் உயிர் பிச்சைக் கொடு!” என்று வேண்டினான்.

***

நீர் - நீர்தான்; இ கடல் தாவும் வேகம் அமைத்தீர் - இந்த கடலை கடந்து சென்று (செய்தி தெரிந்து) மீளுதற்கு உரிய வலிமை பொருந்தியுள்ளீர்; (ஆதலால்) ஏகு மின்- இங்கிருந்து விரைந்து செல்லுக; ஏகி - அவ்வாறு சென்று; எம் உயிர் நல்கி இசை கொள்ளீர் - எங்களுக்கெல்லாம் உயிரைக் கொடுத்து பெரும் புகழைப் பெறுக; (நீர் இவ்வாறு