பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர காண்டம்

247



காரணமாய் அமைந்தன; “நீ இல்லாமல் நான் இல்லை” என்று சோக கீதம் பாடினான்; ‘நோய்க்கு அவள்தான் மருந்து’ என்று வற்புறுத்திக் கூறினான்; தானாய்ப் பழுக்காத பழத்தை அடித்துப் பழுக்க வைக்க நினைத்தான்; அது பழுது ஆகிவிட்டது; அச்சுறுத்தினால் அவள் நிச்சயம் பணிவாள்; நயப்புரை பேசினால் தன்னை நாடுவாள் என்று எதிர்பார்த்தான்; இரண்டிலும் தோல்வி அடைந்தான். “இன்னும் இரண்டு மாதம் தவணை தருகிறேன்” என்று தெரிவித்தான். “காலில் விழுந்து வணங்கிக் கேட்கிறேன். மறுத்தால் என் வாளில் விழுந்து நீ மடிய வேண்டுவது தான்” என்று இறுதி உரை கூறி எச்சரித்தான்.

ஆதிக்க வெறி அவனை ஆட்கொண்டது; அதிகாரத் தால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்தான்; சீதைக்குக் காவலாய் நின்ற அரக்கியருக்கு அவளைப் பணிய வைக்கும்படி ஏவல் இட்டான். “இன்னுரை கூறியாவது வன்முறைச் செயலாலாவது அவளைப் படியவைக்க வேண்டும், என்று முடிவாகக் கூறிச் சென்றான்.

அரக்கியர் ஆவேசம் கொண்டனர். “கொல்லுமின்; தின்னுமின்” என்றுகூறி, அவளைச் சுற்றி வட்டமிட்டனர்; பேய்க் கூட்டமாய் மாறிக் கூத்திட்டு அச்சுறுத்தினர்; அருவருப்பான அக்காட்சி சீதைக்கு வெறுப்பு ஊட்டியது; வேதனையைத் தந்தது; இராவணனை எதிர்க்க முடிந்தது; இப்பேய்க் கூட்டத்தை ஒட்ட முடியவில்லை; திரிசடை இடை மறித்தாள். ‘ஆட்சி நிலைக்கும் என்று ஆரவாரம் செய்கிறீர்; நாளை ஆட்சி மாறினால் அதிகாரிகளின் நிலை யைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்’ என்று குறிப்பாய்