பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

படுவதற்குக் காரணம், கம்பனும் ஒரு குலோத்துங்க சோழனும் ஒட்டக்கூத்தனும் பிரதாபருத்திர தேவனும் சமகாலத்தவர் என்று கர்ணபரம்பரைகள் கூறுவதும், ஒட்டக்கூத்தன் உலாவால் பாடிய மூன்று சோழர்களும் பிரதாபருத்திரனும் சகம் 11-வது 12-வது நூற்றாண்டுகளுக்கிடையில் விளங்கினார்கள் என்று சிலாசாசனின் நிச்சயித்திருப்பதுமே. சிலாசாசனங்கள் எப்பொழுதும் ஒப்புக்கொள்ளத்தக்க பிரமாணம் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அந்தச் சாசனங்களில் குறிக்கப்படும் வருஷங்கள் எந்தச் சகாப்தத்திலிருந்து கணக்கிடப்படுகின்றன என்று நிர்ணயிப்பதில் எப்பொழுதும் அபிப்பிராய பேதங்களிருக்கின்றன. ஆகையால் சிலாசாசனிகளுடைய தீர்மானங்களைப் பூர்ணப் பிரமாணமாகக் கொள்ளுவது சரியாகாது. பிரதாபருத்திரனுக்கும் கம்பனுக்கும் சுற்பிக்கிற சம்பந்தத்தைப் பற்றி 20.ம் பக்கம். அடிக்குறிப்பில் எழுதியிருக்கிறோம். ஒட்டக்கூத்தன் உலாவால் பாடிய விக்கிரமன், குலோத்துங்கன், ராஜராஜன் என்ற பேர்களுள்ள சோழர் மூவரும் ஒருவர் பின் ஒருவராக சகம் 1040 முதல் 1122க்கு மேல் வரையில் அரசாண்டார்கள் என்பது சிலசாசனிகளின் அபிப்பிராயம். இது உண்மையாக இருக்கும்பக்ஷத்தில் கம்பனும் ஒட்டக்கூத்தனும் சம காலத்தவர்களாக இருந்திருக்க முடியாது என்று தான் நமக்குத் தோன்றுகிறதே ஒழிய, கம்பன் சகம் 21-வது 22-வது நூற்றாண்டுகளில் விளங்கியிருக்கவேண்டும் என்று நிச்சயிக்கத் தோன்றவில்லை.

கம்பனும் ஒட்டக்கூத்தனும் சமகாலத்தவர் என்று எல்லாக் கரண பரம்பரைகளும் ஒத்துக் கூறும்போது இதை எப்படி மறுக்கலாகும் என்று ஓர் கேள்வி பிறப்பது இயற்கை. ஆனால் வேறு வேறு காலத்தி லிருந்த மகான்களையும் மகா கவிகளையும் ஒரே காலத்தி லிருந்ததாகச் சொல்லுவது கண்ண பரம்பரைகளுக்குச்

2