பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தலை பெற்றது; இசுபெயின், ஆசுதிரியா, ஃபிரான்சு, ஃஆலந்து ஆகிய நாடுகளின் பிடியிலிருந்து முறையே விலகி விடுதலை பெற்றது; முதல் உலகப் பெரும்போரில் செர்மனியால் வெல்லப்பட்டுப் பிறகு விடுதலை அடைந்தது. இவ்வாறாக, அயலவர் ஆட்சியினின்றும் விடுதலை பெற்ற பெல்சியத்தை வாழ்த்திப் பாரதியார் பாடியுள்ளார். ஆங்கிலேயரிடமிருந்து இந்தியர விடுதலை பெறப் ஆோராடிய பாரதியார், அடிமையாயிருந்த பெல்சிய நாடு விடுதலை பெற்றதை வாழ்த்தியது இயற்கையே!

4-6-3-புதிய ருழ்சியா:

சார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியினின்றும் விடுதலை பெற்றுப் புதிய பொதுவுடைமைக் குடியரசாக மலர்ந்த குழ்சிய நாடு பற்றி இத் தலைப்பில் பாரதியார் பாடியுள்ளார்.

4-6-4-கரும்புத் தோட்டத்திலே

இந்திய மக்களுள் சிலர் பல நாடுகட்குச் சென்று அடிமைகளாகி, தேயிலைத் தோட்டத்திலும் கரும்புத் தோட்டத்திலும் இன்ன பிறவற்றிலும் விலங்கு போல் வருந்தி உழைத்து வந்தனர். இந்த நாடுகளுள் ஃபிசித் தீவுகள் (Fizi Islands) என்பது ஒன்று. இது பசிபிக் மாகடலின் தென்மேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு தீவுக் கூட்டம். ஆங்கிலேயரின் குடியேற்ற நாடாக இருந்த இந்நாட்டில் ஏறத்தாழ இந்தியர்கள் பாதி எனலாம். இந்தத்தீவை. 'தெற்கு மாகடலுக்கு நடுவினிலே அங்கோர் கண்ணற்ற தீவு’ என்று பாரதியார் குறிப்பிட்டுள்ளார். இங்கே இந்தியப் பெண்கள் கற்பழிக்கப்படும் கொடுமை வரைக்கும் ஆளாகிக் கண்ணீர் உகுத்த வரலாற்றைப் பாரதியார் மிகவும் உருக்கமாகப் பாடியுள்ளார். இவ்வாறாக, உலக வரலாற்றுச் செய்திகள், பாரதியார் பாடல்களில் இலை மறைகாய்களாக ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.