பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

173

நான்கு இலக்கணங்கள்:

(13) இப்படியாகத் தொல்காப்பியக்காலம் வரை-ஏன் அதற்குப்பின்னும் பல நூற்றாண்டுகள் வரை தமிழிலக் கணம் மூன்று பிரிவாகக்கொள்ளப்பட்டுவந்தது. இடையில் ‘இறையனார் அகப்பொருள் என்னும் நூலின் உரைகார்ர் காலத்தில்-அதாவது சங்ககாலத்தை ஒட்டி, செய்யுளியற் றும் யாப்பு முறை, பொருளிலக்கணத்திலிருந்து பிரிந்து ‘யாப்பிலக்கணம் எனத் தனியிலக்கணப் பெயர் பெற்றி ருந்தது. எனவே இலக்கணம் நான்கு பிரிவின தாயிற்று.

ஐந்து இலக்கணங்கள்

(14) கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்குப பின், தொல் காப்பியப் பொருளதிகாரத்திலுள்ள உவம இயலையும் மெய்ப்பாட்டியல், செய்யுளியல் ஆகியவற்றிலிருந்து சில செய்திகளையும், சொல்லதிகாரத்தில் ஆங்காங்கே யுள்ள சில செய்திகளையும் பிரித்துத் தொகுத்தாற் போன்ற ஓர் உருவத்தில் அணியிலக்கணம்’ என ஒர் இலக்கணம் பிரிந்து எழுந்தது. இஃதுஞ் சேர இலக்கணம் ஐந்தாயிற்று. .

உவமை அணி:

(15) அணி என்பதற்கு அழகு, நகை (ஆபரணம்), அலங்காரம் முதலிய பொருள்கள் உள்ளன. கருத்துக்களை அழகாக-சுவையாக-அலங்காரமாக வெளியிடும் முறை களைக் கூறுவது அணியிலக்கணம். பிற்கால அணியிலக்கண நூல்களில் உவமை, உருவகம் முதலியனவாக நூறு அணி கள்வரை கூறப்பட்டுள்ளன. அணிகளுள் சிறந்தது-தலைமை யானது உவமை அணி. அதனால்தான் தொல்காப்பியர் உவமையை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்துக்கொண்டு ‘உவம இயல் என அதற்குத் தனியே ஓர் இயலே (chapter)