பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

வதில் பண்டிதமணியவர்கள் மிகவும் வல்லுநர். அவர்தம் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் சிலவும் கம்பனைப் பற்றிஎனக்கு மிகவும் ஆழமாக அறிமுகம் செய்து காட்டின.

எனவே, யானும் சொற்பொழிவுகட்குக் கம்பராமாயணத்திலிருந்து தலைப்பு கொடுக்கலானேன். கான மயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி போல,யானும்சொற்சுவை பொருட்சுவை கூறலானேன். மயிலம் கல்லூரியில் கம்பராமாயணப் பாடம் நடத்தியபோது,சொல்நயம் பொருள் நயம் கூறி மிகவும் அலட்டிக் கொண்டேன். கம்பனை முற்ற முழுதும் சுவைக்க வேண்டும் என விரும்பினேன். 1943 ஆம் ஆண்டு, மூன்று திங்கள் காலம் கோடை விடுமுறை விட்டார்கள். அபபோது கல்லூரி நூல்நிலையத்திலிருந்து கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும் விட்டிற்கு எடுத்து வந்துவிட்டேன்.காலையிலிருந்து மாலை வரை வீட்டுத் திண்ணையில் அமர்ந்துகொண்டு ஆறுகாண்டங்களையும் மனநிறைவோடு படித்து முடித்தேன். நூற்றுக் கணக்கான பாடல்களை மனப்பாடம் செய்தேன்.

இதுநிற்க, கம்பனை எனக்கு அறிமுகம் செய்தவர்கள் நன்றாக அறிமுகம் செய்து காட்டியுள்ளார்கள் என்பதற்கும், யானும் ஒரளவேனும் கம்பனைக் கண்டுகொண்டுள்ளேன் என்பதற்கும் சான்று தரவேண்டுமல்லவா? இதோ ஒன்று தருகிறேன்:

தென்னார்க்காடு மாவட்டத்தில் சங்கராபரணி ஆற் றின் வடகரையில் கொடுக்கூர் என்னும் திருமால் திருப்பதி ஒன்றுள்ளது. ஒருமுறை அந்த ஊருக்கு யான் சொற்பொழிவாற்றச் சென்றிருந்தேன். சொற்பொழிவின் தலைப்பு ‘ஒரு நாள் பழகிய உத்தமன்’ என்பது- அஃதாவது குகனைப் பற்றியதாகும் அது. அவைத் தலைவர் உயர்திரு, க. இராமநாதன் செட்டியார், B.A.,B.L. ஆவார். இவர்