பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூபதியின்

ஒருநாள்அலுவல்

"தோ எனக்கொன்று கொஞ்சம் சொத்து இருக்கிறது பிரதர்! நான் ஒன்றும், அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை நிம்மதியாக வாழ எனக்கு வசதியிருக்கிறது. ஆண்டவன் அப்படி ஒன்றும், என்னை உழைத்து உருக்குலையும்படியான நிலையிலே விட்டு வைக்கவில்லை. வாழ் வதற்காக வதைபடு என்று என் தலையில் ஒன்றும் எழுதியில்லை" என்று கூறினார், ஓய்வூர் மிட்டாதாரர் ஓயிலானந்த பூபதி. கொஞ்சம் கோபத்துடன், அவரிடம் பேசிக் கொண்டிருந்த "பிரதர்" துரைசிங்கம் என்பவர். துரைசிங்கம் பூபதியிடம், கொஞ்சம் சுறுசுறுப்பாக வேலை செய்து, யுத்தக்கடன் பத்திரங்களை அதிகமாக விற்று, 'கவர்னர் பெருமாள்' ஓய்வூருக்கு வரும்போது இந்தப் பக்கத்திலேயே, அதிகமாக யுத்த உதவி செய்தவர் மிட்டாதாரர் தான் என்கிற கியாதியை அடைய வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருந்தார். யுத்தக் கடன் பத்திரங்ககளை விற்பது, யுத்த உதவிநிதி சேர்ப்பது இரண்டும் முதலிலே ஓயிலானந்த பூபதிக்குச் சந்தோஷமாக இருந்தது. அதிலும், மேற்படி நிதிக்காசு,சங்கீதக் கச்சேரிகள் முதலியவற்றை ஏற்பாடு செய்யும்போது, ரொம்பக் குஷி, பூபதிக்கு இந்தச் சந்தோஷத்துடன், கொஞ்சம்