பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூபதியின் ஒருநாள் அலுவல்

9


நீங்கள் போட்ட கோட்டைத் தாண்டுவதில்லையாமே" என்றாள் கோகிலம். கோடுபோடுவது நான், புதியவீடு கட்டுவதுவோ" என்றான் கோடீஸ்வரன் வேடிக்கையாக. "அந்த வீடு உங்களுக்கும் சொந்தம் தானே” என்று பாத்யதையைக் கவனப்படுத்தினாள் கோகிலம்.

"உனக்கு என்னப்பா குத்தலும் குடைச்சலும், பெட்டியிலே பணம் இருக்கிறது ஏராளமாக வட்டி வட்டி மூலம் அதனை வளர்க்கச் சரியான் தந்தை இருக்கிறார். நீ சுற்றலாம், ஆனந்தமாக. விலையைப்பற்றிக் கவலை இல்லாமல் சாமான்களை வாங்கலாம். காலத்தைப் பற்றிய கவலையின்றி, வேடிக்கையாக இருக்கலாம். எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். நீ கஷ்டபட்டுச் சம்பாதித்தது என்ன கெட்டுவிட்டது! எப்படியோ சொத்துச் சேர்ந்து விட்டது, சுகமாக வாழ முடிகிறது. நீ எதற்குப் பாடுபடப் போகிறாய், மற்றவர்களைப் போல நீயும் கஷ்டப்பட்டுப் பணம் சேர்ந்திருந்தால், உனக்கும் தெரியும் அதனுடைய பலன்! சீமானுக்குப் பிறந்தாய், சுகம என்ற தொட்டிலிலே வளர்ந்தாய் இப்போது ஆனந்தம் என்ற அம்ச தூளிகா மஞ்சத்திலே புரள்கிறாய் உனக்கு, ஊரின் கஷ்டம் என்ன தெரியும். பணம் தேடி அலுப்பவனின் பதைப்பு எப்படிப் புரியும், பாடுபடுபவனின் தொல்லையை எப்படி நீ தெரிந்து கொள்ளப்போகிறாய். உன் கவலை பூராவும், வித விதமான களியாட்டங்களைத் தேடுகிற அளவுதானே. பூபதியின் நண்பர்களிலே இவன் ஒரு தனி ரகம். பணக்காரனிடம் பணம் இருக்கிறது. மலரிலே கணம் இருப்பது போல, நாம் பச்சிலை, நாளாவட்டத்திலே சருகு ஆகிவிடுவோம். மலருக்கு இருக்கும் மணம் தனக்கு இருக்கவேண்டுமென்று பச்சிலை எதிர்பார்க்கலாமா, என்ற வாதம் புரிபவன், வக்கில் அல்ல, வியாபாரி, வியாபாரியினும், நஷ்டக் கணக்கையே அடிக்கடி கண்டு நொந்தவன்; பூபதியுடன் ஒரு காலத்திலே படித்தவன் என்ற முறையிலே,