பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



110

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


இமயத்திலிருந்துவந்த முதுபேயின் இந்திர சாலங்களைக் கண்ட அலகைகள் அவ்வித்தைகளைக் கண்டு வெருவி அவற்றை நிறுத்துமாறு காளி தேவியை வேண்டும்,

அக்கணம் ஆளும் அணங்கினை
வந்தனை செய்துக ணங்களெலாம்
இக்கணம் ஆளும்இ னித்தவிர்
விச்சையெ னக்கைவி திர்த்தலுமே.[1]

[கணம்:பேய்க்கூட்டம்; அணங்கு-காளி; விச்சை-இந்திர சாலம்; கைவிதிர்த்தல்-கைநடுங்குதல்]

என்ற தாழிசையிலும் அச்சச் சுவையைக் காணலாம். இந்திர சாலத்தைக் கண்டு வெருவி ஓடின. நிலையினைக் காட்டும் தாழிசைகளும் அச்சச்சுவை பயப்பனவாம்.[2]

இளிவரல் சுவை

அருவருப்பு அல்லது 'இழிவு' தோன்றதிற்கும் செயல்களனைத்தும் இளிவரல் சுவையை நல்கும்; நாணத்தக்க செய்கையாலும் இச்சுவை பிறக்கும். கருணாகரனும் அவன் வீரர்களும் கலிங்க நாட்டைத் தாக்கியபொழுது அவர்கள் முன்நிற்க மாட்டாது 'கலிங்க வீரர்கள்' மாற்றுருக் கொண்டு மறைகின்ற செய்திகளைக் கூறும் தாழிசைகளில் இச்சுவையைக் காணலாம். சிலர் சமணர்கள் போலவும், சிலர் புத்தர்கள்போலவும், சிலர் வேதியர்கள் போலவும், சிலர் பாணர்கள் போலவும் மாற்றுருக்கொண்டு மறைகின்றனர்.


  1. தாழிசை-173
  2. தாழிசை188-171,