பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கருணைகரத் தொண்டைமான்

117


தருண மங்கையை மீட்பதோர்
    நெறி தரு கென்னும்
பொருள் நயந்து நன் நூல்நெறி
    யடுக்கிய புல்லில்
கருணை யங்கடல் கிடந்தனன்
    கருங்கடல் நோக்கி
வருண மந்திரம் எண்ணினன்
   விதிமுறை வணங்கி[1]

என்ற பாடலிலும், பரதன் கங்கை வேடனாகிய குகனுக்குத் தன் தாயை அறிமுகம் செய்யுங்கால் "கடுமையார் கானகத்துக் கருணையார் கலியேக"[2] என்ற தொடரிலும் 'கருணாகரன்' என்ற பெயரின்" பொருளை விளக்கிக் கூறுதலைக் காண்க. இவற்றை யெண்ணியே சயங்கொண்டாரும்,

இலங்கை யெறிந்த கருணா கரன்றன்
     இசைவெஞ் சிலையின் வலிகேட்பீர்
கலிங்க மெறிந்த கருணா கரன்றன்
     களப்போர் பாடத் திறமினோ[3]

என்று பாடியுள்ளார் என்று கொள்ளலாம். இருவரும் கருணாகரப் பெயருடையராயினும் ஒருவன் இலங்கையெறிந்தபுகழுடையவன்; மற்றவன் கலிங்கமெறிந்த புகழுடையவன்.

கருணாகரத் தொண்டைமான் பல்லவ அரச குலத்தைச் சார்ந்தவன்; தொண்டைமான் என்ற சிறப்புப் பெயர் பெற்றவன்; வண்டை என்ற ஊரின் தலைவன். இவ்வாறு சிற்றரசனாகத் திகழ்ந்த இவன்


  1. கம்ப-வருணனை வழிவேண்-செய் 5
  2. கம்ப குகப் பட-செய் 69.
  3. 4. தாழிசை -64