பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



126

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


கோட்டத் திருப்புருவங் கொள்ள வவர்செங்கோல் கோட்டம் புரிந்த கொடைச்சென்னி-நாட்டஞ்
சிவந்தன வில்லை திருந்தார் கலிங்கஞ்
சிவந்தன செந்தித் தெற.[1]

அருவ ரொருவர்மேல் வீழ்ந்துவட நாடர்
அருவ ரருவரென வஞ்சி-வெருவந்து
தீத்தீத்தீ யென்றயர்வர் சென்னி படைவீரர்
போர்க்கலிங்க மீதெழுந்த போது[2]

இவை மூன்றும் தண்டியலங்கார மேற்கோள் பாடல்கள்.

இனி, 'ஸூக்திரத்நஹாரம்' என்ற வடமொழி நீதித்திரட்டை எழுதி 'குலசேகரன்' என்று தன் அரசன் பெயரிட்டு வழங்கியவன் குலசேகரனுடைய தலைமை அமைச்சனான காலிங்கராசன் என்பவன் என்றும், அக்காலிங்கராயன்தான் அபயன் சேனாதிபதியாகவும் சிதம்பரம் முதலிய கோவில்களில் திருப்பணி .செய்தவனாகவும் கல்வெட்டுக்களால் அறியப்படும் காலிங்கராயனேயாதல் வேண்டுமென்றும், இக்காலிங்கராயனது கல்வெட்டுக்களில் இவனுக்கு அருளாகரன் என்ற மறுபெயரும், தன்னரசனான அபயன் பொருட்டு வடநாட்டு அரசருடன் போர்கள் பல புரிந்த செய்தியும் காணப்படுதலால் இவனே அவ்வபயனுடைய தலைமைச் சேனாதிபதியாய்க் கலிங்கமெறிந்த கருணாகரனாக வேண்டுமென்றும், வண்டை என்ற ஊரின் தலைவனாகக் கருணாகரனையும், மணவில் என்ற ஊரின் தலைவனாக இக் காலிங்கராயனையும் பரணியும் கல்


  1. குணக்குறை விசேட அணியின் மேற்கோள்.
  2. சொற்பொருள் பின்வரு நிலையணியின் மேற்கொள்