பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்பனை ஊற்று


ற்பனை என்பது புலன்கள் நேரே ஒரு பொருளை அனுபவியாத காலத்திலும் அந்தப் பொருளை நினைவிற்குக்கொண்டுவந்து அப்பொருளினிடத்து மீண்டும் அனுபவத்தை ஏற்றவல்ல ஒரு வகையாற்றல். இக்கருத்தைச் சொற்களால் தெளிவாக விளக்க முயல்வதைவிட ஓர் எடுத்துக்காட்டால் விளக்குவது சிறந்தது.

தங்கம் உருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ?[1]

என்ற அடிகள் காலைக்கதிரவனை வருணிக்கும் பாரதியாரின் அற்புதச் சொல்லோவியம். இளஞ் சூரியனது கதிர்கள் உருக்கி ஓடவிட்ட தங்கம் போலப் பரவிவருகின்றதாம்; உருக்கிய தங்கமாயினும் என்ன மாயத்தாலோ சூடுகுறைந்திருக்கின்ற தாம். இத்தகைய ஒளியுடன் அக்காட்சியில் இனி மைப்பும் கலந்து கொஞ்சுவதைக் காண்க. இதைத் தான் கவிஞன் “தழல் குறைத்துத் தேனாக்கி” என்று மிக இங்கிதமாக வெளியிட்டுள்ளான். நாமும் அக்காட்சியின்பத்தில் மூழ்கி அதை அனுபவிக்கின் -


  1. 1. பாரதி : குயில்