பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறநெறிச்சாரம்

260

அறிதிறன்

வீடும்‌ தரும்‌; செல்வம்‌ எனப்படும்‌ தேவலோக வாழ்வும்‌. தரும்‌. அறத்தான்‌ வகுவதே இன்பம்‌. பின்னர்‌ ஆற்றலாம்‌ என்று இராமல்‌, ஒல்‌லும்‌ வகையால்‌ அறவினையை ஒழியாது செய்தல்‌ வேண்டும்‌. செயற்பாலது அறமே ; ஒழியற்பாலது பழியே. மனத்தின்கண்‌ ஒருவன்‌ குற்றம்‌. இலனாதலே அறமாகும்‌. அறவழியில்‌ அன்‌றி, வீணான வழியில்‌ பொருளையிழந்து வறுமை எய்தினவன்‌, ஈன்ற தாயினாலும்‌ பிறன்போல நோக்கப்படுவான்‌. அறத்‌தாற்றின்‌ ஒருவன்‌ இல்வாழ்க்கை ஈடத்‌துவானாயின்‌ அவன்‌ பிறவா நிலையடைவான்‌ ; அன்னான்‌ தவம்‌ செய்‌வாரின்‌ மேலானவனாக மதிக்கப்‌ பெறுவான்‌; அவனே அந்தணன்‌ என்று சிறப்பிக்கப்‌ பெறுவான்‌. அறவழியே ஒழுகி நீத்தவர்‌ பெருமையையே நூல்களெல்‌லாம்‌ பெருமையாகக்‌ கூறும்‌. எனவே ஒழுக்கம்‌ உயிரைவிட மேலானதாகப்‌ போற்றப்படும்‌. அறம்‌ சிறந்ததென்பது, இறைவன்‌ அறவாழியந்தணன்‌ என்‌று கூறப்‌படுதல்கொண்டு உணரலாம்‌. இவ்வாறெல்லாம்‌ அறங்‌கள்‌ திருக்குறளால்‌ போழ்றியுரைக்கப்பட்டுள்ளன.

தமிழருடைய தொன்றுதொட்ட அறம்‌, இல்லறம்‌, இறவறம்‌ என்று இருவகையாகத்‌ திருக்குறளால்‌ உணர்த்தப்பட்டுள்ளது. துறவறமும்‌ ஒருவரைவிட்டு ஒருவர்‌ நீங்கு தலன்‌றிப்‌ பற்‌றிலிருந்து நீங்குதல்‌ என்னும்‌ பொருண்மையே உடையது. உலகியற்‌ பொருள்களில்‌ பற்று நீங்குதற்குப்‌ பற்‌றற்‌றவர்‌ கூட்டமும்‌, பற்றற்ற இறைவனைப்‌ பற்றுதலும்‌ வழிகளாகும்‌. “அறம்புரி சுற்றமொடு கிழவனும்‌ இழத்தியும்‌ சிறந்தது பயிற்றல்‌ இறந்ததன்‌ பயனே” என்ற தொல்காப்பியச்‌ சூத்திரப்‌ பகுதியும்‌, “பற்றுக பற்றற்றான்‌ பற்றினை அப்பற்‌றைப்‌ பற்றுக பற்று விடற்கு” என்ற திருக்குறளும்‌ முறையே அவ்வழிகளைக்‌ குறித்தல்‌ காணலாம்‌. வீடு பயத்தற்கு முருகனிடம்‌, அவனருளையும்‌, அதனைப்‌ பெறுதற்குத்‌ தாம்‌ அவனிடத்துச்‌ செய்யும்‌ அன்பையும்‌, அவ்விரண்டினாலும்‌ வரும்‌ அறத்தையும்‌, கடுவன்‌ இளவெயினனார்‌ வேண்டுதலாக உணர்த்தும்‌, “யாஅம்‌ இரப்பவை பொருளும்‌ பொன்னும்‌ போகமுமல்ல, நின்பால்‌ அருளும்‌ அன்பும்‌ அறனும்‌ மூன்றும்‌” என்‌னும்‌ பரிபாடல்‌, அறத்தின்‌ இன்றியமையாமையையும்‌ சிறப்பையும்‌ விளக்கும்‌. மொ. அ. து.

அறநெறிச்சாரம்‌ ஒரு நீதி நால்‌. பதின்மூன்‌றாம்‌ நூற்றாண்டின்‌ தொடக்கத்தில்‌ ஏற்பட்டிருக்கலாம்‌. இதன்‌ ஆரியர்‌ முனைப்பாடியார்‌. இவர்‌ சமணர்‌. தீபங்குடியில்‌ விளங்ய அருங்கலான்வயத்தாரால்‌ இயற்றப்பட்ட அருங்கலச்‌ செப்பு என்னும்‌ அறநூலின்‌ அமைப்பைப்‌ பின்பற்றிக்‌ காட்டி, ஒழுக்கம்‌, ஞானம்‌ என்னும்‌ மூன்று பெரும்பகுதிகளையும்‌ 992 வெண்பாக்‌களையும்‌ கொண்டுள்ளது இந்நூல்‌. இந்நூலில்‌ அருகனைச்‌ சிவன்‌ என்று கூறியிருக்கிறார்‌. அறங்களைக்‌ கூறும்‌ முமை அழகியது.

அறவண அடிகள்‌ காவிரிப்பூம்‌ பட்டினத்திலிருந்த பெளத்த சங்க முனிவர்‌. கோவலன்‌ கொலையுண்‌.டது கேட்டுத்‌ துறவு பூண்ட மாதவிக்குத்‌ தருமோபதேசம்‌ செய்தார்‌ ; மணிமேகலைக்கு அமுதசுரபியின்‌ பெருமை கூறினார்‌; காவிரிப்பூம்பட்டினம்‌ கடல்கொண்ட பிறகு காஞ்சி நகரம்‌ சென்று தவம்‌ செய்தார்‌ என்று மணிமேகலை கூறும்‌.

அறிதிறன்‌ (Intelligence) : சூழ்கிலைக்கேற்றவாறு ஓர்‌ உயிர்‌ தன்னைத்‌ தக அமைத்துக்‌ கொள்ளும்‌ திறமையை உயிரியலார்‌ அறிதிறன்‌ எனக்‌ குறிப்பிடுகிறார்கள்‌. தன்னைச்‌ சுற்றிக்‌ கூடு கட்டிக்கொள்ளும்‌ பட்டுப்‌ புழுவானது கூடே தேவையில்லாத சூழ்நிலையிலும்‌ இச்செய்கையில்‌ ஈடுபடுகின்றது. ஆகையால்‌ இயல்பூக்கமே இதன்‌ செயலிற்கு அடிப்படையாக உள்‌ளது எனத்‌ தெளிவாகிறது. ஆனால்‌ ஓரிடத்தில்‌ கூடுகட்டத்‌ தொடங்கும்‌ பறவை தனக்குப்‌ பகை விலங்கு யாதாயினும்‌ அருகில்‌ இருப்பதைக்‌ கண்டு விட்‌டால்‌, அதைவிட்டுத்‌ தீங்கற்ற வேறோரிடத்திற்குச்‌ சென்று, அங்கே கூடுகட்டத்‌ தொடங்குகிறது. இச்‌ செய்கையில்‌ ஆரம்ப நிலையிலுள்ள அறிதிறனைப்‌ பார்க்கிறோம்‌. மனிதனைத்‌ தவிர மற்ற விலங்குகளில்‌ இத்தகைய அறிதிறன்‌ வளர்ச்சியை வாலில்லாக்‌ குரங்கினிங்‌களிடம்‌ மிகுதியாகக்‌ காண்கிறோம்‌. குரங்கு, யானை, நாய்‌, பூனை முதலிய விலங்குகளின்‌ செய்கைகளிலும்‌ ஒரு நோக்கம்‌ இருப்பதை அறிய முடிகிறது. இது அனுபவத்தினாலும்‌ பழக்கத்தினாலும்‌ மட்டும்‌ ஏற்படுவதன்று. இவற்றின்‌ பல நடத்தைகளின்‌ இடையே காணப்படும்‌ தொடர்புகள்‌ இவற்றிற்கு இயற்கையான அறிதிறன்‌ உண்டு எனக்‌ காட்டுகின்றன.

அறிதிறனுக்கு உயிரியலில்‌ வழங்கும்‌ வரையறை உளவியலிற்குப்‌, போதுமானதன்று. மனித உள்ளத்தை ஆராய்கையில்‌ இவ்வளவு தூலமான வரையறை அதிகப்‌ பயன்‌ தராது. உளவியலார்‌ பலரும்‌ அறிதிறனைப்‌ பலவாறு வரையறுத்திருக்கின்‌றனர்‌. கருத்துப்‌ பொருள்‌ (Abstract) சிந்தனையைச்‌ செய்யும்‌ திறமை அறிதிறன்‌. என்‌று டெர்மன்‌ என்பவர்‌ வரையறுத்தார்‌. அறிதிறன்‌ என்பது ஏற்கும்‌ திறன்‌ என்று உட்ரோ விளக்கினார்‌. சூழ்நிலைக்கேற்றவாறு தன்னைத்‌ தக அமைத்துக்‌ கொள்‌ளலே அறிதிறன்‌ என்பது கால்வின்‌ கூறிய வரையறை. சிக்கலான பல தூண்டல்கள்‌ ஒன்றுகூடி. நடத்தையில்‌ ஒருமித்த பயனை விளைவிக்கும்‌ உயிரியல்‌ அமைப்பே இது எனப்‌ பீட்டர்சன்‌ என்‌ற அறிஞர்‌ கருதினார்‌. அறிதிறன்‌ சோதனைகளுக்குக்‌ காரணமாக இருந்த பிளே என்பவர்‌ அறிதிறன்‌ என்பதில்‌ உட்கோள்‌ (Comprehension), ஆக்கத்திறன்‌ (Inventiveness) விடரமுயற்சி, ஆராய்ந்து பகுத்தல்‌ ஆகியவை அடங்கும்‌ என்‌று கருதினார்‌.

இந்த வரையறைகளில்‌ எதுவுமே முழுதும்‌ திருப்திகரமான தன்‌று. இவை தெளிவற்றவையும்‌, முரணானவையும்‌ ஆகும்‌. ஆகையால்‌ இதை வரையறுப்பதையே விட்டுவிட்டு, அறிதிறனை அடிப்படையாகக்‌ கொண்‌டவை எனக்‌ கருதப்படும்‌ சில செய்கைகளினால்‌ அறியப்‌படும்‌ ஓர்‌ அமிசமே என்று இதைக்‌ கொள்வது சிறந்தது. எனக்‌ கருதப்படுறது. ஒவ்வொருவனுக்கும்‌ பலவேறு அளவுகளில்‌ இத்திறமை உள்ளது, சுத்றுப்புறத்திற்கு ஏற்றவாறு அவனிடத்தில்‌ தோன்றும்‌ எதிர்வீனைகளின்‌ தன்மையினால்‌ இத்திறமை வெளிப்படுகறது.

அறிதிறன்‌ சோதனைகளில்‌ ஒருவர்‌ வாங்கும்‌ மார்க்கு வயதையோட்டி மாறுவதால்‌, இது இளமையில்‌ விரைவாகவும்‌, பின்னர்க்‌ குறைவாகவும்‌ முதிர்ச்சி யடைந்த, கடைசியாக மாறாத நிலையை அடைகிறது எனக்‌ கருதப்‌பட்டது. நரம்பு மண்டலத்தின்‌ அபிவிருத்தியாலும்‌ முதிர்ச்சியாலும்‌ கற்கும்‌ திறன்‌ வேறுபடுகிறது. அறிதிறனின்‌ இயக்கத்தை இது பாதிக்கிறது. வயதானபின்‌ மூளையின்‌ புறணி சிதைவடையத்‌ தொடங்கும்‌.வரை இது மாறுவதில்லை. ஆனால்‌ இளமையிலிருந்து முதுமைவரை அறிதிறனில்‌ உண்மையான மாற்றம்‌. நிகழ்வதில்லை என்பதே தற்கால உளவீயலாரித்‌ பெரும்‌பான்மையோரது கருத்து.

அறிதிறன்‌ குறைவான ஒருவனது வாழ்க்கை உடனடியான காலத்தைமட்டும்‌ ஒட்டியதாக இருக்கும்‌. உயர்ந்த அறிதிறன்‌ கொண்டவர்களது வாழ்வு கடந்த காலத்துடனும்‌ வருங்காலத்துடனும்‌ தொடர்புகொண்-