பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 17

பாண்டியனுடைய கூனை நிமிர்த்த இவ்வற்புதம் மணவில் கூத்தன் காலிங்கராயனின் தில்லையில் கண்ட வெண்பாச் சாசனங்களுள் பின் வருமாறு குறிக்கப் பெற்றுள்ளது.

'தென்வேந்தர் கூன் நிமிர்த்த செந்தமிழர் தென்கோயில்

பொன்வேய்ந்து திக்கைப் புகழ் வேய்ந்தான் - ஒன்னார்க்குக் குற்றம் பலகண்டோன் கோளிழைக்கும் வேற்கூத்தன்

தர 15

சிற்றம் பலத்திலே சென்று

இப்பாடலில், பாண்டியன் கூன் நிமிர்த்தமையும், ஞானசம்பந்தர் கோயில் பொன்வேயப் பெற்றமையும் கூறப் பெறுகிறது. இதனுள் செந்தமிழர் என்றது சம்பந்தரை. சம்பந்தர் தன்னை, 'தமிழ் ஞானசம்பந்தர்' என்று குறிப்பிடுவதும் இதனை நினைவுறுத்தும்.

பரசமய கோளரி

சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளியபோது, "பேர்பலவும் ஊதுமணிச் சின்னமெலாம் பரசமய கோளரி வந்தான் என்று பரிமாற' என்பர் சேக்கிழார்." பின்னர்ச் சம்பந்தர் போதிமங்கைக்கு அருகில் எழுந்தருளும்போது, "பார் குலவும் தனிக்காளம் சின்னம் எல்லாம் பரசமய கோளி வந்தான் என்று ஊதின என்பர்." இதனால் சம்பந்தர் பரசமய கோளி எனப் பெற்றார் என அறியலாம்.

ஆச்சாள்புரம் (திருநல்லூர்ப் பெருமணத்து) கல்வெட்டில் “பரசமய கோளி நல்லூர்' என்று ஒரூர் குறிக்கப் பெறுகிறது. ஆச்சாள் புரத்தில் “பரசமய கோளி மடம்' என்று ஒரு மடம் இருந்ததாகவும் அறியப் பெறுகிறது."

திருஞானசம்பந்தன் குகை

முனிவர் வாழும் இடங்கள் குகைகள். பிங்கலத்தை நிகண்டு, முனிவர் இருப்பிடம் எனக் கூறும். திருப்புத்துர்

வட்டம் சதுர்வேதி மங்கலம் என்ற ஊரில் மூன்றாம்