பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 49

நிபந்தம் அளித்ததை அறிவிக்கிறது.' இராசராசன் திருப்பதியம் ஓத நியமித்த 48 பிடாரர்களில் இருவர்க்கு ஆரூரர் என்ற பெயரும் மேலும் இருவர்க்கு நம்பியாரூரர் என்ற பெயரும் அமைந்திருந்தமை அறிகிறோம்.'

தடுத்தாட்கொண்டருளிய நாயனார்

சுந்தரர்க்குத் திருமணம் நிகழவிருக்கையில், சிவபெருமான் கயிலையில் அருளிய வண்ணம் தடுத்தாட் கொள்வான் வேண்டிக் கிழவனாராக வந்து சுந்தரரை நோக்கித் தமக்கு அடிமை செய்ய வேண்டும் என்றார். இருவருக்கும் வாது நிகழ்ந்தது. திருவெண்ணெய்நல்லூரில் இவ்வழக்கு விசாரிக்கப் பெற்றது. கிழவனாரே வென்று பணிசெய்ய வேண்டும் என்றார்: இங்ங்னம் சிவபெருமான் தடுத்தாட் கொண்டமையின், 'தடுத்தாட்கொண்டருளிய நாயனார் என்றும், வழக்கில் வென்றமையின் விரைந்து வெல்லும் பெருமாள்' என்றும் வழங்கப்பெற்றார்.

இவ்வழக்கு அரிய வழக்கு என்பதை நாமறிவோம். இவ்வரிய வழக்கினை வென்றமையின் சிவபெருமான் அரியவான வழக்கு வென்ற பெருமான் எனப்பெறுதல் பொருந்தும். இதனை நினைவுகூரும் வகையில் திருவெண்ணெய்நல்லூருக்கு அருகில் ஒருர், அரிய வான வழக்கு வென்ற பெருமாள்நல்லூர் எனப் பெற்றது. மேற் கூறியன யாவும் இராசராசச் சம்புவராயனது கல்லெழுத்து ஒன்றால் அறியலாம்.'

மூன்றாம் குலோத்துங்கனது மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டும்." ஏழாம் ஆண்டுக் கல்வெட்டும்" இறைவனை 'ஆட்கொண்ட தேவர்' என்று சிறப்பிக்கின்றன.

இரண்டாம் குலோத்துங்கனுடைய திருவெண்ணெய் நல்லூர்க் கல்வெட்டொன்றால்," தடுத்தாட்கொண்ட நல்லூர் என்னும் ஊர்ப்பெயரும், ஆலாலசுந்தரப் பெருந் தெரு என்னும் தெருவின் பெயரும் அறிய வருகிறது.