பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 59

ஆளுடைய நம்பி ரீபுராணம்

இரண்டாம் இராசாதிராசன் தன் ஒன்பதாம் ஆட்சியாண்டில் திருவொற்றியூர்க் கோயிற்குச் சென்றிருந்தான். அப்பொழுது திருவொற்றியூர் இறைவற்குப் பங்குனி உத்திரப் பெருவிழா நடந்து கொண்டிருந்தது.

அத்திருவிழாவின் ஆறாம் திருநாளான புதன்கிழமையும் ஏகாதசியும் பெற்ற ஆயிலிய நாளில் படம் பக்க நாயக தேவர் திருமகிழின் கீழ் எழுந்தருள்விக்கப் பெற்றார். இராசாதிராச

தேவனும் அப்பொழுது அக்காட்சியைக் காணச் சென்றனன்.

அங்கு அரசனோடு மடமுடைய சதுரானான பண்டிதன், மாகேசுவரக் கண்காணி திருவீதி வேயிடம் கொண்டான். பூரீ காரியம் அரிய பிரான்பட்டன், சோம சித்தாந்தம் வக்காணிக்கும் வாகீசுவர பண்டிதன். காலும் பிடாரும் செயங்கொண்ட சோழ மண்டலப் பிடாரன், திருவொற்றியூர்ப் பிச்சன், கோயில் நாயகம்

படம்பக்க நாயகபட்டன், கோயில் கணக்குத் திருவொற்றியூடையான் உறவாக்கினான் ஆகியோர் வந்தி ருந்தன п.

இறைவன் திருமுன் ஆளுடைய நம்பி ரீபுராணம் படிக்கப் பெற்றது. எல்லாரும் புராணத்தைக் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்பொழுது அரசன் "அமுதங் கிழவன் பெரியான் சோமன் என்பவனுக்கு வடுகப் பெரும் பாக்கத்துக் காணியுரிமையை அளிக்குமாறு உத்தரவிட்டான்." எனக் கி. பி. 1172-73க்குரிய திருவொற்றியூர்க் கல்வெட்டொன்று கூறுகிறது’.

சோம சித்தாந்தம் வக்காணிக்கும் வாகீச பண்டிதரே ஆளுடைய நம்பி ரீ புராணத்தை விரிவுரை செய்தார் என்று கருதுபவரும் உண்டு.” அது பொருந்தாது. இவரும் பிறருடன் இருந்து ஆளுடைய நம்பி ரீ புராணத்தைக் கேட்டார் எனக் கல்வெட்டுத் தெளிவாகக் கூறுகிறது.