பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 67

4. மூவர் ஆலயங்கள்

1. சீகாழித் திருஞான சம்பந்தர் கோயில்

சீகாழியில் திருஞான சம்பந்தருக்குத் தனித் திருச்சுற்றாலயம் உளது. இவரை இங்கு எழுந்தருள்வித்தவள் திரிபுவனச் சக்கரவர்த்திகள் கோநேரின்மைகொண்டானின் அடுக்களைப் பெண்டிரில் மூத்த உய்யவந்தாள் இராசவிச்சாதரி என்பவள் ஆவாள்.

மூன்றாம் இராசராசனின் இரண்டாம் ஆட்சியாண்டில் கங்கைகொண்ட சோழபுரத்தில், கங்கைகொண்ட சோழன் திருமதிலுக்குள் வடகூரில் உத்தமசோழப் பெருந்தெருவில் இருந்த, வானமாளிகையுடையான் வேம்பன் வைசியார் என்பவனின் மகன் உரம் பூண்டான் என்பவன் இக்கோயிலின் முதல் பிரகாரத் திருப்பணிகளைப் புரிந்தான் (388 of 1918)

சோழவளநாட்டு ஆக்கூர் நாட்டுத் தலைச்சங்காட்டுச் சபையினர் தலைச்சங்காட்டில் மும்மடிசோழன் பேரம்பலத்தில் கூடினர்; கழுமலம் ஆளுடைய பிள்ளையார்க்குத் திருப்பாற்போனகம் செய்தருளுதற்காகத் திருமடைப்பள்ளிப் புறமாக நிலம் அளித்தனர். தலைச்சங்காட்டைச் சேர்ந்த சிற்றுாராகிய சோழபாண்டிய நல்லூரில் கண்ணாறு எனும் பெயரால் அமைந்த ஐந்துவேலி நிலம் அவரால் தரப்பெற்றது.

திரிபுவனச்சக்கரவர்த்திகள் கோநேரின்மை கொண்டானின் 6ஆம் ஆட்சியாண்டில் காளத்திமலையில் இருந்து உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பத்தூர் நாட்டு மாத்துருடையான் கோவன் நம்பி என்பவன் இவ்வாளுடை" பிள்ளையாருக்கு அர்ச்சனாபோகமாக நான்குவேலி நிலம் தந்தான்.