பக்கம்:களத்துமேடு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

களத்து மேடு

 அங்கிட்டாலே தோட்டக்காட்டரிதி காலாற நடந்து திரும்புவம்!...... வாரபாதையிலேயே குளிச்சுக்கிடலாம்....! வந்து சாப்பிட்டுப் புட்டு, உண்ட மயக்கம் தெளிஞ் சடியும் ரேக்ளாவைப் பூட்டலாம்!...." என்று தட்டித் தடவிச் சொல்லி அவரே முன்னால் புறப்படவும் செய்தார். மகள் உள்ளே கைவேலையாக இருந்ததுவும் அவர்வரை நல்லதாகப் போயிற்று.

சரவணன் வாசலுக்கு வந்தான். உச்சிவானை அண்ணாந்து பார்த்தான். சூரியன் உச்சிக்கு வரும் வேளை அண்டிக்கொண்டிருந்தது. சவுக்கை இடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்தபடி காளையின் பிடிகயிற்றை அவிழ்த்தான். காளையை நுகத்தடியில் பூட்டினான். சந்தைப்பேட்டைப் பூரணி அல்லவா?... இளவரசுப்பட்டம் என்ற நினைப்பு அதற்கு. அதன் ஜாதிவளம் அப்படி கழுத்தை நொடித்தது. சலங்கைகள் ஓசையிட்டன.

"நடந்தே போவலாமே?..." என்றார் சேர்வை.

"ஓ ! அப்படியே செஞ்சிட்டாப் போவுது!" சரவணன் திரும்புகையில், உள்ளே நடைத் தூணில் ஒட்டுக் கொடுத்த படி மூக்குத்தித் திருகாணியை நிமிண்டியவளாக நின்ற கோலக் கலாபமயிலைக் காணத்தவறவில்லை.

நாய்கள் இரண்டு ஓடிப்பிடித்து விளையாடின! அப்போது, மேற்கு நோக்கிச் சென்ற முத்தையாத்தேவர்நாலாவது வீட்டுக்காரர், சேர்வையை நோக்கி, "யாரு இவுக?" என்று கேட்க, "இவுகதான் நம்ம புது... மா...ப் புள்ளை!" என்று பதிலளித்தார்.

குடுகுடு கிழவி ஒருத்தி வழி தடவி வந்தாள். அவிந்த விளக்குடன். உலை வைக்க தீவேண்டும். நெருப்புப்பற்ற வைக்க அவ்வீட்டை நாடி வந்தாள்.

"எங்க ஊர்க்காட்டிலே இப்படி ஒருத்தர் வூட்டிலேருந்து, மறு வூட்டுக்கு நெருப்பு கொளுத்த போக மாட்டாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/37&oldid=1386323" இலிருந்து மீள்விக்கப்பட்டது