பக்கம்:களத்துமேடு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதிர்க் கொத்து 7
விளக்குகள் மூன்று !

‘மதுமலர் அபயக்கரம்’ காட்டி, அறக்கருணை முகம் காட்டி, அன்பொழுகும் விழி காட்டி, விதியின் வினைக்கு மருந்தும் காட்டி நிற்கவேண்டிய அந்த ‘ஆத்தா’—புவனம் ஆளும் லோகத்தாய்—அந்த ரத்தக்காட்டேறி—ஏன் அப்படி எக்காளமிட்டுச் சிரித்தாள்?

கைல்ம்மைக்குத் திக்கும் புரியவில்லை; திசையும் மட்டுப்படவில்லை. மீண்டும் மீண்டும் பார்த்தாள் வெறி மூண்ட கண்களால் பார்த்தாள். பிறகு, அவளது நீள்விழிகளின் விளிம்பு களிலிருந்து நீண்ட கண்ணிச் மாலை நீண்டது. அவளுடைய பூக்கரங்கள் அம்பிகையை நோக்கிக்குவிந்தன. கும்பிடு கொடுத்தாள். கும்பிடு கொடுத்துதான் கும்பிடு வாங்க வேண்டும் என்பார்கள்!—ஆத்தாளுக்கும் மனிதப் பிண்டங்களுக்குமா சேடை?...

ஊஹும்! ......

தைலம்மை அங்கிருந்து கொண்டே எதிர்ப்புறம் பார்வையை வீசினாள். எதிர்ப்பக்கத்தில் சூடேறிய வெய்யிலின் தாக்குதலுக்குப் பணிந்த பனைமரங்கள் சுதாரிப்புத் தப்பி நின்றன.

அவள் அத்திசையில் பாய்ந்தாள். ‘கொசுவத்தை’ வரிந்து கட்டிக் கொண்டு ஓட்டமும் நடையுமாகப் பறந்தாள்-அவளுடன் பாசமும் பக்தியும் பயமும் பறந்தன. தன்னுடன் கமுக்கமாக விதியும் பின் தொடர்ந்த துப்பு அவளுக்கு எங்ங்னம் தெரிய முடியும்?.........

ஒரு தொலைவுக் கல்லில் செம்பாதி துாரம் ஓடியிருப்பாள்.

களத்துமேடு வந்து விட்டது. நாற்புறமும் படர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/78&oldid=1386318" இலிருந்து மீள்விக்கப்பட்டது