பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழும் பாரதியும்

17


அக்காலத்தில் கையாளப்பட்ட பொருள்கள், வாழ்க்கை இவைகளை அனுசரித்து இலக்கணம் செய்யப்பட்டது. ஆயிரமாயிரம் ஆண்டுகட்குப் பின்னரும் முன்னிருந்தது போலவே இருக்கவேண்டுமென்று சொல்வது சரியா ? காலதேச வர்த்தமானத்துக்கேற்ப இலக்கணமும் இலக்கியமும் மாற்றியமைக்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால் அழிந்து போகும். தெய்வத் தன்மை பொருந்திய தமிழ்தானே சீர்திருந்திக்கொள்கிறதா? இல்லை. சீர்திருத்த வேண்டுமென்றால் கோபம் வருகிறது.

முன்னிருந்தோர் மதங்களைப்பற்றியே பாடிப்பாடி உயர்ந்த பக்தி நிலைக்கு வந்துவிட்டார்கள். மற்றவைகளைப்பற்றி அவர்கள் பாடக்கூட நினைத்த தில்லை

முதல்நூல், வழிநூல், சார்பு நூல், இந்த மூன்றையும் தவிர வேறு வகையில் ஏதாவது செய்தால், அந்தக் காலத்தில் ராஜாக்களிடமிருந்து கவிப்பெரு மக்கள் காதையோ மூக்கையோ அறுத்து விட உத்தரவிட்டுவிடுவார்கள். ஐம்பது வருடங்களுக்கு முன்னால் கடவுளுக்கும் மனிதனுக்கு மிடையேயுள்ள சம்மந்தத்தைப்பற்றிப் பாடாத வேறு நூல்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

கடவுளையே பாடவேண்டிய கஷ்டத்திலிருந்து விடுபட விரும்பிய சிலர் கடவுளை நாயகனாக வைத்துக் கவியியற்ற ஆரம்பித்தார்கள். கடவுளைப்பற்றிப்


கவிஞர் பேசுகிறார்