பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தமிழும் பாரதியும்


பாரதியார் மகள் சிறு குழந்தை, அக்காலத்தில். அந்தப் பெண் இப்பொழுது பாரதியாருடைய சரித்திரத்தை எழுதுகிறது. அந்தப் பெண்ணுக்குப் பாரதியாரைப் பற்றி என்ன தெரியும்? அவர் புதுவையிலிருந்து மைலத்திற்குப் போனதாக எழுதுகிறாள் அந்தப் பெண். அவ்வளவும் அபத்தம் பக்கத்தை நிரப்ப அதையும் பத்திராகாசிரியர் வெளியிடுவதா? கவிஞனைப்பற்றி உண்மையை எழுத வேண்டும். பொய்யை எழுதிப் பொய்யென்று கண்டு பிடிக்கப் பட்டால் மற்றவையும் பொய்யென்று கருதப்பட்டுவிடும்.

***

பாரதியார் புதுவையிலிருந்து 'சுதேச மித்திர' னுக்கு ஒருநாள் வியாசமும், மறு நாள் பாட்டுமாக. எழுதிக்கொண்டிருந்தார். அவருக்கு ஒரு சமயம் ஆனந்த மேலீட்டால் இரண்டு நாளும் பாட்டுக்களே எழுதியனுப்பி விட்டார். அதற்குப் பத்திரிகாசியரிடமிருந்து பதில் வந்தது, சமாசாரப் பத்திரிகையில் கவிக்கு இடமில்லை யென்று. பிறகு வியாசமேயெழுதத் தொடங்கினார், பாட்டைப் பாட்டு என்று உணரவில்லையே என்று பாரதியார் வருந்தினார். அப்பொழுது சென்னையில் வி. வி. எஸ். ஐயர் ஆங்கிலக் கவிகளைத்தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டு அவ்வளவு அழகாக எழுதக்கூடிய கவி தற்காலம் தமிழுலகில் இல்லை என்று அபிப்


கவிஞர் பேசுகிறார்