பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழும் பாரதியும்

25


என்றெல்லாம் கிளப்பிவிட்டார்கள். இம்சை பொறுக்கமாட்டாமல் தாமே தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்பது இந்த மடையர்களின் முடிவு. காரைக்குடியில் அன்பர்கள் பாரதியார் திட்டத் திட்ட அதைப் பொறுத்துக் கொண்டு உபசாரம் செய்து அவருக்கு வேண்டியதையெல்லாம் அளித்தார்களென்றால் அதை மறக்க முடியுமா! மூன்று லட்ச ரூபாய்களைக் கொடுத்து அழகான வீட்டில் உட்காரவைத்து ஐந்து ஆட்களை அமர்த்தி நூலாக எழுதித்தள்ளு என்றல்லவோ சொல்லியிருக்க வேண்டும் பாரதியிடம். இல்லை. அவர் தெருத் தெருவாக அலைந்தார். எனக்குத் தெரியும். விரிந்த உள்ளமில்லாமல் அவருடைய குலத்தினரே அவரைத் தூஷித்தார்கள் செத்துப் போன பின்னர் பாரதி நாமம் வாழ்க என்கிறார்கள்.

காந்திஜி ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்தார். அதை எதிர்த்து எழுதியது "சுதேச மித்திரன்." பத்திரிகை விற்பனையாகவில்லை. பிறகு பாரதியைக் கூப்பிட்டார்கள். அவர் காந்திஜிக்கு விரோதமாக எழுத மாட்டேனென்று சொல்லி விட்டார். "உங்களிஷ்டம் எப்படி வேண்டுமானுலும் எழுதுங்கள் என்றார்கள். இதற்கென்ன அர்த்தம்?

***

பாரதிக்கு எல்லா மதமும் ஒன்று, கூடுமானால் மதமே இல்லை யென்றாலும் பரவாயில்லை. ஜாதி


கவிஞர் பேசுகிறார்