உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பாடிக் கூத்தாடிப் பாரெங்கும் சென் ருேடிப் பண்பாடு காட்டிப் பயிற்றுவிக்கும் தாயகமாய்த் தெற்கில் குமரியொடு சேரா வடதிசையில் நிற்கும் ஒருவிந்தம் நீள் கடல்கள் கீழ்மேலாய் எந்நாளும் மாரு இயல்பமைந்த எல்லேயதாய் இந்நான்கின் எல்லே யிடைவிரிந்த நீள் பரப்பாய்க் கன்னடமாய் ஆந்திரமாய்க் கண்குளிரும் கேரளமாய் இன்னவற்றின் தாயாய் இலங்கும் தமிழகமாய்க் கூடும் திராவிடமாய்க் கோலோச்சும் தென்னகமே நாடி வருகின்ற நம் நாடு பொன்னுடு; புனல் வளம் நாடா வளத்ததுவாய் நாடி வருவோர்க்குக் கோடா மனத்தால் கொடுக்கும் இயல்புடைத்தாய்த் தள்ளா விஜள வயலில் தாளாற்றும் ஏருழவர் கொள்ளா துழைத்துக் குவிக்கும் வளத்ததுவாய் வான மழை நீரும் வற்ருத ஊற்றகமும் கான மலேயுதித்துக் காக்கின்ற ஆறுகளும் ஆயபுனல் மூன்ருலும் ஆக்கும் பெரும்பொருளால் தேயமெலாம் வேட்கின்ற சீர்மைத் தகைமைத் தாய் வள்ளுவம் காட்டும் வளமெல்லாம் தன்னகத்துக் கொள்ளும் திருநாடே கூட்டாட்சித் தென்னுடு; குறிஞ்சி வளம் நீளும் தொடர் மலைகள் நெஞ்சம் கவருமெழில் ஆளும் உயர்மலைகள் கோடை அனல்போக்கும் வண்ணக் குளிர் மலைகள் வாய்க்கும் பழமலைகள் எண்ணக் குறையாமல் எத்துணையோ ஈங்குண்டு; 103